
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகியுள்ள 'அண்ணாத்த' படத்தை, அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். ரஜினிகாந்தின் ரசிகர்கள் மட்டும் அல்லது அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டிய 5 காரணங்கள் குறித்து பார்ப்போம்.
ரஜினிகாந்த் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தலைவரின் ஆக்ஷன்-டிராமா திரைப்படமான 'அண்ணாத்த' இன்று (அக்டோபர் 4 ஆம் தேதி) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ளது. இந்த படத்தை 'சிறுத்தை' படம் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், ஆகிய படங்களை அடுத்தடுத்து இயக்கிய, பிரபல இயக்குனர் சிவா, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் 'சன் பிச்சர்ஸ்' நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக திரையுலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா லாக்டவுன் காரணமாகவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உடல் நிலை காரணமாகவும் 'அண்ணாத்தா' படத்தின் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டாலும், அனைத்தையும் கடந்து இந்த ஆண்டு முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து, தமிழகம் மற்றும் உலக நாடுகளில் அதிக நாடுகளில் பெருவாரியான திரையரங்குகளில் வெளியிடப்படும் திரைப்படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது 'அண்ணாத்த'.
கண்டிபாப்பாக 'அண்ணாத்த' படத்தை நீங்கள் பார்க்க வேண்டிய காரணங்கள் இதோ...
ரஜினிகாந்த்:
எத்தனையோ இளம் நடிகர்கள் கோலிவுட் திரையுலகில் அடியெடுத்து வைத்தாலும், 70 வயதிலும் யங் ஹீரோ போல ரசிகர்களின் மனதை வசீகரிக்க தலைவரால் மட்டுமே முடியும். எந்திரன், கபாலி, காலா என அடுத்தடுத்து இவரின் ஒவ்வொரு படங்கள் வெளியாகும் போதும், இவருக்கான ரசிகர்கள் கூட்டமும் கூடிக்கொண்டே தான் செல்கிறது. அதே போல் இவர் பாட்ஷா, படையப்பா, முத்து, காளையன் என எந்த பெயர் வைத்து நடித்தாலும் செம்ம மாஸ் தான்... எனவே தலைவருக்காகவே இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.
கதை:
இரண்டாவது முக்கிய காரணமாக பார்க்கப்படுவது இந்த படத்தின் கதை களம்... "ரஜினிகாந்த் தனது சகோதரி கீர்த்தி சுரேஷ் மீது பாசம் கொண்ட அண்ணனாகவும், அவருக்கு பிரச்சனை என்கிற போது கையில் கத்தியை பிடிக்க தயங்காத கிராமத்து இளைஞராகவும் நடித்துள்ளார். ரஜினியின் சகோதரி ஒரு கட்டத்தில் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கும் போது... ரஜினி மிகவும் யதார்த்தமாகவும், உண்மையாகவும், எதிர்கொள்ளும் விதம் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் செம்ம மாஸ்.
நடிகர்கள்:
மூன்றாவது முக்கிய காரணம் 'அண்ணாத்த' படத்தில் ரஜினிகாந்த்தை தவிர பெரிய நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். குறிப்பாக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கீர்த்தி சுரேஷ், கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி, மீனா மற்றும் குஷ்பூ சுந்தர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து ஒன்றிணைத்து படம் இயக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனால் அதனை மிகவும் நேர்த்தியாக செய்து காட்டியுள்ளார் இயக்குனர் சிவா.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் டி.இமான்:
நான்வாது காரணம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக பல படங்களில் பின்னணி பாடியுள்ளவர் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். குறிப்பாக பல படங்களில் இவர் தான் ரஜினிகாந்துக்கு இன்ரோ பாடலை பாடுவார். அந்த வகையில் 'அண்ணாத்த' பாத்திலும் இவர் தான் தலைவருக்கு அறிமுக பாடலை பாடியுள்ளார். இதுவே அவர் பாடிய கடைசி பாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. டி.இமான் இசையில் 'அண்ணாத்த அண்ணாத்த' என தொடங்கும் இந்த பாடல் வெளியான போதில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. அதே போல் 'அண்ணாத்த' படத்தின் பேக் ரவுண்டு மியூசிக் முதல் அனைத்திலும் ஸ்கோர் செய்துள்ளார் இமான். எனவே இசைக்காகவே இந்த படத்தை பார்க்கலாம்.
தீபாவளி:
பண்டிகை நாட்கள் என்றாலே... கொஞ்சம் கலகலப்பு, கலர் ஃபுல், செண்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த கலவையாக உருவாகி, குடும்பத்தோடு சென்று பார்க்க வேண்டிய படத்தை தான் பெரும்பாலானவர்கள் விரும்புவார்கள். அவர்களின் ரசனைக்கு ஏற்ற போல் அனைத்து அம்சங்களுடனும் இந்த தீபாவளி பண்டிகையை மேலும் சிறப்பாகும் விதமாக வெளியாகியுள்ளது 'அண்ணாத்த'. அதே போல் ரசிகர்கள் தலைவரின் படத்தில் எதிர்பார்க்க கூடிய, பன்ச் வசனங்களும் இந்த படத்தில் அதிகமாகவே இடம்பெற்றுள்ளது. எனவே தலைவரின் ரசிகர்களை மட்டும் இன்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்துள்ளார் 'அண்ணாத்த'.