இது வெறும் செய்தி அல்ல.. தமிழ்நாட்டுக்கு எச்சரிக்கை மணி.. அலறும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்..!

By vinoth kumar  |  First Published Dec 31, 2023, 7:07 AM IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 3 பேர் கேரளா, 2 பேர் கர்நாடகா, தமிழகத்தில் ஒருவர் அடங்குவர். 


தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். 

இந்தியாவில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த  கொரோனா பாதிப்பு இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இந்நிலையில்,  தமிழ்நாடு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டும் என விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதுகுறித்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் மீண்டும் வேகமெடுப்பதையும், நம் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்திருப்பதை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 3 பேர் கேரளா, 2 பேர் கர்நாடகா, தமிழகத்தில் ஒருவர் அடங்குவர். இது வெறும் செய்தி அல்ல, தமிழ்நாடு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டியதற்கான 'எச்சரிக்கை மணி'!!!

இதையும் படிங்க;- வேகமாக பரவும் JN.1 கோவிட் மாறுபாடு.. குழந்தைகளை எப்படி பாதுகாப்பது? சில டிப்ஸ் இதோ..

இரு மாநில எல்லைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கி இருப்பதால் விமான நிலையங்கள், இரயில் நிலையங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதேபோல், உருமாறிய JN1 தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதனால் பாதிக்கப்படுபவர்களையும், இணை நோய் உள்ளவர்களையும் தொடர்ந்து கண்காணித்திட மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதை அரசு உறுதி செய்திட வேண்டும். 

உலகம் முழுவதும் தாக்கம் மீண்டும் வேகமெடுப்பதையும், நம் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் பாதிப்பு தீவிரமடைந்திருப்பதை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்… pic.twitter.com/d8oCVQDwDz

— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl)

 

மிகமுக்கியமாக, "பொதுமக்களுக்கு முறையான, தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து", மக்களை எவ்வித அச்சமும் இல்லாமல் வைத்திருக்க வேண்டியது அரசின் தலையாய கடமை, பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

click me!