நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் அறிவிக்கவில்லை எனில் திமுக கூட்டணி தேர்தலில் பெறும் பின்டைவை சந்திக்கும் என தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் சேலத்தில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், தமிழ்நாடு அரசு பணிகள் அனைத்தும் தமிழர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வேல்முருகன், நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகளை முதல்வர் பரிசீலிக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் அறிவிக்கவில்லை எனில் தேர்தலில் திமுக தலைமையிலான வெற்றி கூட்டணி பெரும் பின்னடைவை சந்திக்கும்.
கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்சேவை காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்த பிரதமர்
சமூகநீதி பேசும் முதல்வர் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும். ஜிஎஸ்டி மூலம் தமிழகத்தில் இருந்து பெரும் தொகையை வரியாக வசூலிக்கும் மத்திய அமைச்சகம், பேரிடர் காலங்களில் தமிழகத்திற்கு உரிய நிவாரணம் வழங்க மறுக்கிறது. எனவே எதிர்வரும் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். மேலும் ஆளுநர் தலைமையில் செயல்படும் பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள் அரசு விதிகளை மீறி செயல்பட்டால் அவர்களை தமிழக அரசு உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D