அகதிகள் முகாமில் அதகளம் செய்யும் கொரோனா.. உயிருக்குப் போராடும் ஈழத்தமிழர்கள். அலறும் விசிக எம்.பி.

By Ezhilarasan BabuFirst Published May 14, 2021, 11:14 AM IST
Highlights

தர்மபுரி மாவட்டம் தும்பஹல்லி அகதிகள் முகாமில் 220 குடும்பங்கள் உள்ளன, சுமார் 800 பேருக்கு மேல் அங்கு வசிக்கின்றனர், அவர்களில் 40 பேருக்கு மேல் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

தர்மபுரி மாவட்டம் தும்பல ஹல்லி அகதிமுகாமில் 40க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மூன்று பேர் உயிருக்கு போராடுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.ரவிக்குமார் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர்களை காப்பதற்கு சிறுபான்மையினர் நலம் மற்றும் அகதிகள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான் அவர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவருக்கு, ரவிக்குமார் கடிதம் ஒன்று எழுதி உள்ளார் அதில் கூறியிருப்பதாவது: 

தர்மபுரி மாவட்டம் தும்பஹல்லி அகதிகள் முகாமில் 220 குடும்பங்கள் உள்ளன, சுமார் 800 பேருக்கு மேல் அங்கு வசிக்கின்றனர், அவர்களில் 40 பேருக்கு மேல் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் இப்பொழுது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். தியாகராஜா (வயது 50) என்கிற ஈழத்தமிழர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆக்சிஜன் இல்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். தொடர்பு எண்: ( 98 43 473 970),  பிரகாஷ் (40 ) என்கிற ஈழத்தமிழர் தர்மபுரி மருத்துவமனையில் இதுவரை படுக்கை கிடைக்காமல் காத்திருக்கிறார். 

புவனா (36) என்பவர் ஆக்சிஜன் அளவு குறைந்த நிலையில் முகாமிலேயே உயிருக்கு போராடுகிறார். கொரோனா  பாதிப்பால் ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ் அகதிகளை காப்பாற்ற மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என வலியுறுத்தி உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சுகாதாரத்துறை அமைச்சரும் அதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 
 

click me!