ரவுடிகளுக்கு கட்சியில் இடமில்லை... கதவை சாத்திய திமுக..!

Published : May 14, 2021, 11:14 AM IST
ரவுடிகளுக்கு கட்சியில் இடமில்லை... கதவை சாத்திய திமுக..!

சுருக்கம்

இப்போது மீண்டும் தி.மு.க., ஆளுங்கட்சி ஆகி விட்டதால் மறுபடியும் அந்த ரவுடிகள் கட்சி தாவ முயற்சி செய்து இருக்கிறார்கள்.

தமிழகத்தில், கடந்த நான்கு ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தார். அவர் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்திற்கு  செல்லும்போது எல்லாம், உள்ளூர் ரவுடிகள் மீது போலீசார் ஏதாவது வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பி வைப்பார்கள். இதனால், தி.மு.க.,வில் இருந்த 19 ரவுடிகள், உள்ளூர் ஆளுங்கட்சி பிரமுகர்கள் தயவில் அ.தி.மு.க.,வுக்கு தாவி விட்டார்கள்.

 

இப்போது மீண்டும் தி.மு.க., ஆளுங்கட்சி ஆகி விட்டதால் மறுபடியும் அந்த ரவுடிகள் கட்சி தாவ முயற்சி செய்து இருக்கிறார்கள். ஆனால், திமுகவை சேர்ந்த சேலம் மத்திய மாவட்ட செயலர் ராஜேந்திரன், யாரையும் சேர்க்க கூடாது என, கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டு விட்டார் என்கிறார்கள். இதனால், ரவுடிகள் வட்டாரம் கவலையில் இருப்பதாக கூறுகிறார்கள். 

PREV
click me!

Recommended Stories

பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம்.. ராமதாஸை சுற்றி தீய சக்திகள்.. ஒரே போடாக போட்ட அன்புமணி!
ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?