#BREAKING தலைவிரித்தாடும் கொரோனா... திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

By Kanimozhi PannerselvamFirst Published May 14, 2021, 11:14 AM IST
Highlights

தற்போது திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் தன்னுடைய கட்சி எம்.பி., எம்.எல்.ஏக்கள் குறித்து அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா 2வது அலையைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிதாக பொறுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 24ம் தேதி வரை தீவிர கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ​தமிழகத்தில் கொரோனா பெருந்தோற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். 

அப்படி அளிக்கப்படும் ஒவ்வொரு நன்கொடைகளும் ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் வசதிகளுடன்கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செரிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

​இதனையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ரூ.10 லட்சமும், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ.1 கோடியும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர். திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடியும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ரூ.25 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கினர். 

இன்று காலை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இப்படி பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் கொரோனாவை எதிர்த்து போராடும் தமிழக அரசுக்கு ஆதரவாக நிதி வழங்கி வருகின்றனர். தற்போது திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் தன்னுடைய கட்சி எம்.பி., எம்.எல்.ஏக்கள் குறித்து அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என தெரிவித்துள்ளார். 
 

click me!