பள்ளி மாணவிகளுக்கு கொரோனா.. யாரும் அச்சப்பட தேவையில்லை.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

By vinoth kumarFirst Published Sep 3, 2021, 4:43 PM IST
Highlights

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு பாராட்டியது. செப்டம்பருக்கு 1.04 கோடி தடுப்பூசி தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் தமிழகத்திற்கு 34 லட்சம் கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டது. மேலும், 2 கோடி தடுப்பூசி வேண்டுமென மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். 

தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்குமாறு மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியாவுடன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்தார். அப்போது, மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்தார் இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- தமிழகத்திற்கான தேவைகள் மற்றும் கூடுதல் கொரோனா தடுப்பூசி குறித்து மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினேன். தமிழகத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தோம். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தப்பட்டது. 

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு பாராட்டியது. செப்டம்பருக்கு 1.04 கோடி தடுப்பூசி தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் தமிழகத்திற்கு 34 லட்சம் கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டது. மேலும், 2 கோடி தடுப்பூசி வேண்டுமென மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். கேரள எல்லையோரம் உள்ள தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு 100 சதவீத தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. புதிய மருத்துவ கல்லூரிகளில் இந்தாண்டே மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க கோரிக்கை வைத்தோம்.

சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் 95 சதவீதம் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, குன்னூர் தடுப்பூசி உற்பத்தி மையங்களை திறக்க பேசி முடிவெடுக்கலாம் என்றார். புதிதாக 25 ஆரம்ப சுகாதார மையங்கள் அமைப்பது தொடர்பாகவும் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அதிக அளவில் தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டன. ஆனால், தற்போது அந்த சூழல் இல்லை. 

மேலும், அரியலூர் பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று முன்பே இருந்திருக்க வேண்டும். அது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் யாரும் அச்சமடையத் தேவை இல்லை என்றும் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.

click me!