உள்ளாடையுடன் ரயிலில் பயணித்த எம்.எல்.ஏ... பயணிகள் அதிர்ச்சி..!

Published : Sep 03, 2021, 03:57 PM IST
உள்ளாடையுடன் ரயிலில் பயணித்த எம்.எல்.ஏ... பயணிகள் அதிர்ச்சி..!

சுருக்கம்

ரயிலில் ஏறிய சிறிது நேரத்தில் எனக்கு வயிறு வலி ஏற்பட்டது. அடிக்கடி கழிவறை செல்ல வேண்டியிருந்ததால் நான் உள்ளாடையுடன் இருந்தேன். நான் பொய் சொல்லவில்லை

பிகார் மாநிலம், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., கோபால் மண்டல் என்பவர் தேஜஸ் ராஜதானி எக்ஸ்பிரஸின் முதல் வகுப்பு ஏ.சி., பெட்டியில் உள்ளாடையுடன் வலம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

நேற்று பாட்னாவிலிருந்து டெல்லிக்கு தேஜஸ் ராஜதானி எக்ஸ்பிரஸின் முதல் வகுப்பு ஏ.சி., பெட்டியில் எம்.எல்.ஏ., கோபால் மண்டல் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் பனியன் மற்றும் கால் ட்ரவுசர் அணிந்து அந்த கோச்சில் இருந்துள்ளார். இதனை கவனித்து ஷாக்கான  பிற பயணிகள் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் எம்.எல்.ஏ.,வுக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளாது. பின்னர் ரயில்வே போலீசார் மற்றும் டிக்கெட் பரிசோதகர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியுள்ளனர். எம்.எல்.ஏ., மீது பயணிகள் புகாரளித்துள்ளனர்.

இந்நிலையில் வெள்ளை பணியுடன் எம்.எல்.ஏ., வலம் வந்த போட்டோ சமூக ஊடகங்களில் பரவியது. இதனையடுத்து நடந்த சம்பவத்திற்கு எம்.எல்.ஏ., கோபால் மண்டல் விளக்கம் தந்துள்ளார். “ரயிலில் ஏறிய சிறிது நேரத்தில் எனக்கு வயிறு வலி ஏற்பட்டது. அடிக்கடி கழிவறை செல்ல வேண்டியிருந்ததால் நான் உள்ளாடையுடன் இருந்தேன். நான் பொய் சொல்லவில்லை.” என கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!