துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பிக்கு கொரோனா... அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி..!

Published : Jun 29, 2020, 04:45 PM ISTUpdated : Jun 29, 2020, 04:47 PM IST
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பிக்கு கொரோனா... அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி..!

சுருக்கம்

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் சகோதரரும் தேனி ஆவின் தலைவருமான ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் சகோதரரும் தேனி ஆவின் தலைவருமான ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகம் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இதுவரை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு மதுரையில் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் சகோதரரும் தேனி ஆவின் தலைவருமான ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். ஒ.ராஜாவுக்கு கார் ஓட்டுனர் மூலமாக அவருக்கு தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவ வட்டார தகவல் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த ஸ்ரீபெரும்பத்தூர் எம்எல்ஏ பழனி, அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

இத்தாலியில் முதலீடு செய்ய அமைச்சர் கே.என். நேரு தரப்பு திட்டம்..? அமலாக்கத்துறை பகீர் தகவல்..!
நீதித்துறையில் மணி மகுடம்..! 9 ஆண்டுகளில் 1.20 லட்சம் வழக்குகளை முடித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்..!