ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்..!

By vinoth kumarFirst Published Jun 29, 2020, 4:16 PM IST
Highlights

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே  அறிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே  அறிவித்துள்ளார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவில் ருத்தரதாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களில் நாளுக்கு நாள் பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் நேற்று 5,493 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 3-வது நாளாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாநிலத்தில் 1,64,626 பேரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 2,330 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் 86,575 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதேபோல, நேற்று மட்டும் 156 பேர் கொரோனா நோய்க்கு பலியாகி உள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7,429 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 5-ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிய உள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறுகையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே மேற்கு வங்கம், ஜார்கண்டில்  ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!