தொடர் மழை: கீழடி அகழாய்வு பணிகள் நிறுத்தம்..!

By T BalamurukanFirst Published Sep 29, 2020, 8:21 AM IST
Highlights

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால் கீழடி, கொந்தகை , மணலூர், அகரம் ஆகிய இடங்களில் அகழாய்வுக்கான குழிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் அகழாய்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால் கீழடி, கொந்தகை , மணலூர், அகரம் ஆகிய இடங்களில் அகழாய்வுக்கான குழிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் அகழாய்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 


 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால் கீழடி, கொந்தகை , மணலூர், அகரம் ஆகிய இடங்களில் அகழாய்வுக்கான குழிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் அகழாய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.கீழடியில் கடந்த பிப்ரவரி 19 - ஆம் தேதி முதல் 6 - ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இப்பணி அருகேயுள்ள அகரம், மணலூர், கொந்தகை உள்ளிட்ட இடங்களிலும் விரிவுபடுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்பணிகள் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன்  நிறைவு பெறுகின்றன. ஆனால் அடிக்கடி இப்பகுதிகளில் மழை பெய்வதால் பணிகள் பாதிக்கப்படுகிறது. தற்போது அகழாய்வுக்கான இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமடைந்துள்ளது. அகழாய்வில் கிடைத்த ஏராளமான பொருள்களை ஆவணப்படுத்தும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகிறது

.இந்நிலையில் திருப்புவனம் மற்றும் அகழாய்வு நடந்து வரும் மேற்கண்ட இடங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனத்த மழையால் கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய இடங்களில் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளில் முழுவதுமாக மழைத் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.மழை நின்றதும் குழிகளில் தேங்கியுள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்ட பின்னர் அகழாய்வுப் பணிகள் தொடங்கும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்."

click me!