ஆட்டோ ஓட்டுனர் கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை..!

Published : Sep 28, 2020, 10:41 PM ISTUpdated : Sep 28, 2020, 10:42 PM IST
ஆட்டோ ஓட்டுனர் கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை..!

சுருக்கம்

சென்னை அருகே ஆட்டோ ஓட்டுநர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை அருகே ஆட்டோ ஓட்டுநர் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி சஞ்சய் நகர் 6 வது தெருவில் வசிப்பவர் வடிவேல் (எ) அப்புனுராஜ் (40). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்துள்ளார் . இவர் அப்பகுதியில் 3 பெண்களை திருமணம் செய்துகொண்டு தனித் தனியாக வாழ்ந்து வந்த நிலையில் மொத்தம் 5 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தேவி என்ற மனைவி பிரிந்து சென்றார். சரண்யா மற்றும் சந்தியா இருவரும் அப்புனுராஜ் உடன் கருத்து வேறுபாடு காரணமாக சண்டையிட்டுள்ளனர்.இதற்கு காரணம் வேலுச்சாமி மற்றும் அவரது மகன் ரவீஸ்வரன் ஆகியோர்தான் காரணம் என கூறி அப்புனுராஜ் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது குடிபோதையில் இருந்த 3 பேரும் பலமாக மோதி கொண்டனர். இந்தநிலையில் அருகில் இருந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து ரவீஸ்வரன் மற்றும் வேலுச்சாமி இருவரும் சேர்ந்து அப்புனுராஜை பலமாக தலையில் தாக்கியுள்ளனர்.இதில் சம்பவ இடத்திலேயே அப்புனுராஜ் உயிரிழந்தார். இதனையெடுத்து வேலுச்சாமி, ரவீஸ்வரன் இருவரும் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலை செய்யப்பட்டுள்ள அப்புனுராஜ் மீது வடபழனி காவல் நிலையத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கொலை வழக்கு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

PREV
click me!

Recommended Stories

இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!