பள்ளி, கல்லூரி படிக்கும் மகள்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய்..! சிக்கிய இன்ஸ்பெக்டர் கணவர்..!

By T BalamurukanFirst Published Sep 29, 2020, 7:56 AM IST
Highlights

வறுமைக்காக பெற்ற மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த தாய் மற்றும் இன்ஸ்பெக்டர் கணவர் உள்பட பலரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வறுமைக்காக பெற்ற மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த தாய் மற்றும் இன்ஸ்பெக்டர் கணவர் உள்பட பலரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள வேட்டுக்கடை பகுதியில் இருக்கும் வீட்டில் இரவு, பகல் முழுவதும் வெளி ஆட்கள் அந்த வீட்டிற்குள் வந்து செல்லுவது காணப்பட்டது.. இதனால், அப்பகுதியில் உள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்படவே தக்கலை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரனின் உத்தரவின்படி போலீசார் அப்பகுதியில் சென்று நோட்டமிட்டுள்ளனர்.
அப்போது, அந்த வீட்டுக்கு தொடர்ச்சியாக ஆண்கள் மட்டுமே வந்து சென்றுள்ளனர். இதை கவனித்துக்கொண்டிருந்த போலீசார் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்த வெவ்வேறு அறைகளில் சிறுமிகளுடன் இரண்டு நபர்கள் அரை நிர்வாணத்தில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

போலீசாரை கண்டதும் தப்ப முயன்ற இரண்டு பேரை வளைத்து பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஒருவர் வீரவநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் கணவர் ராஜ்மோகன் என்றும், மற்றொருவர் கூலி தொழிலாளி சுனில் என்றும் தெரிந்தது.தொடர்ந்து விசாரித்ததில், மார்த்தாண்டத்தை சேர்ந்த லதா என்ற பெண்தான் இந்த விபச்சாரத்திற்கு முக்கிய குற்றவாளி என தெரிந்தது. வறுமையில் இருந்த லதா, பள்ளியில் படித்து வரும் தன்னுடைய இரண்டு மகள்களையும் விபசாரத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளார். அதற்காக மேட்டுக்கடை பகுதியில் வாடகை வீடு ஒன்று எடுத்து தனது கல்லூரி படிக்கம் மகளையும் பள்ளி படிக்கும் மகளையும் இந்த மகளின் தோழியையும் சேர்த்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். அதோடு, பணத்தாசையை தூண்டி அவரது மகள்களின் தோழி உட்பட மொத்தம் நான்கு பேரை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, சிறுமிகள் நான்கு பேரையும் மீட்ட போலீசார் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. இந்த வழக்கில் லதா, இன்ஸ்பெக்டரின் கணவர் ராஜ்மோகன், சுனில் ஆகியோரை கைது செய்து மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

click me!