கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் வேஷ்டி உருவும் கோஷ்டி கட்சி மோதல்.. தூக்கி எறிந்த நாற்காலிகள்.. மண்டை உடைப்பு

By vinoth kumarFirst Published Sep 25, 2021, 6:29 PM IST
Highlights

சிவகங்கை மாவட்டம் கன்னங்குடி ஒன்றிய நகர செயலராக இருந்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., கே.ஆர்.ராமசாமி மகன் கருமாணிக்கம் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திருவாடனை தொகுதியில் வெற்றி பெற்றதால் நகர செயலர் பதவியில் இருந்து விலகினார். 

தேவகோட்டை காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் முன்னிலையில், இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் கன்னங்குடி ஒன்றிய நகர செயலராக இருந்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., கே.ஆர்.ராமசாமி மகன் கருமாணிக்கம் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திருவாடனை தொகுதியில் வெற்றி பெற்றதால் நகர செயலர் பதவியில் இருந்து விலகினார். அந்த இடத்திற்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக தேவகோட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் நடப்பதை காங்கிரசார் சிலர் செல்போன்களில் பதிவு செய்தனர். கார்த்தி ஆதரவாளர்கள் செல்போன்களை பறிக்க முயன்றனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இக்கூட்டத்தில், கருமாணிக்கம் ஆதரவாளர்களுக்கும், காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியதை அடுத்து அடிதடியில் ஈடுபட்டனர். அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி எறிந்தும், தாக்கியும் ரகளையில் ஈடுபட்டனர்.சிறிது நேரத்தில் அந்த இடம் போர்க்களமாக காட்சி அளித்தது. 

உடனே மோதல் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினர். மண்டை உடைந்த பாலமுருகன், வினோத் ஆகிய இருவரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் எம்.பி. முன்னிலையில் நடைபெற்ற மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!