உஷாரு... திமுக பெட்டிகளை மாற்றி விடும்... எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை..!

Published : Sep 25, 2021, 04:55 PM IST
உஷாரு... திமுக பெட்டிகளை மாற்றி விடும்... எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை..!

சுருக்கம்

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பேசினார்.    

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சி தேர்தலின் போது அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தி.மு.க.வினர் பெட்டிகளை மாற்றி நம்மை தோல்வியுற செய்து விடுவார்கள்.

எனவே தொண்டர்கள் மிகுந்த விழிப்புடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும். மு.க.ஸ்டாலின் தமிழக மக்களை ஏமாற்றி விட்டார். பெண்கள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு பல வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் அவர் முதல்வராக பதவியேற்று 100 நாட்களை கடந்தும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 5 ஆண்டுகளில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அவர் கூறுகிறார். ஆனால் தேர்தல் நேரத்தில் அவர் அப்படி சொல்லவில்லை.

ஆட்சிக்கு வந்தவுடனேயே வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்றார். ஆனால் தற்போது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார். எனவே பொதுமக்கள் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் மிகவும் விழிப்புணர்வுடன் வாக்களித்து அ.தி.மு.க.வை வெற்றிபெற செய்ய வேண்டும். அ.தி.மு.க. பொறுப்பாளர்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தொண்டர்கள் அனைவரும் அ.தி.மு.க. வெற்றிக்காக இரவு- பகல் பாராமல் கடுமையாக உழைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றிபெற்றது என்ற செய்தி நமது காதில் விழவேண்டும். அந்த அளவுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும்’’என அவர் கூறினார். 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!