காங்கிரஸ் கட்சிக்கு வலிமையான தலைவர் தேவை... முகம் சுழிக்க தொடங்கிய கூட்டணி கட்சிகள்..!

By Asianet TamilFirst Published Oct 3, 2021, 9:05 AM IST
Highlights

காங்கிரஸ் கட்சிக்கு வலிமையான தலைவர் தேவை என அக்கட்சியின் கூட்டணி கட்சியான சிவசேனா தெரிவித்துள்ளது. 
 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்தார். அதன் பின்னர் அக்கட்சிக்கு இதுவரை நிரந்தர தலைவர் நியமிக்கப்படவில்லை. வேறு வழியின்றி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைராக சோனியா காந்தி உள்ளார். ஆனாலும், செயல்படாத தலைவராகவே சோனியா காந்தி உள்ளார். இதனால், அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ் மூத்த  தலைவர்கள் அடிக்கடி கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். 
இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த அக்கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் என பலரும் அதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பதவியைப் பிடிப்பது. இன்னொருவரைக் கவிழ்த்துவிட்டு பதவிக்கு வருவது என்று சுயநலமாக இருக்கிறார்கள். இதனால், காங்கிரஸ் கட்சி இன்னும் பலவீனம் அடைந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த செயல்பாடுகளால் அதன் கூட்டணி கட்சிகளும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளன. இதுதொடர்பாக தற்போது சிவசேனா கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் கூறுகையில், “காங்கிரஸ் மிகப்பெரிய கட்சி. அப்படி இருக்கும் அக்கட்சிக்கு தலைவர் இல்லாமல் இருப்பது இயற்கையாகவே குழப்பத்தை ஏற்டுத்தும்.  காங்கிரஸ் மட்டுமல்ல, எந்தக கட்சிக்குமே தலைவர் இல்லாமல் இருப்பது தொண்டர்களிடையே அதிருப்தியைத்தான் ஏற்படுத்தும். அக்கட்சிக்கு வலிமையான தலைவர் தேவை. பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் உடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்திருப்பது கண்டிக்கத்தக்கது. எல்லைப் பிரச்னையில் உண்மையான அக்கறை இருந்தால், மத்திய அரசு ஆட்சியில் உள்ள முதல்வருடன்தான் ஆலோசிக்க வேண்டும். தவிர அம்ரீந்தர் சிங்குடன் ஆலோசிப்பதாகச் சொல்லக் கூடாது.” என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 
 

click me!