
பெங்களூரு
மந்திரி பதவி கிடைக்காவிட்டால் 11 காங்கிரசு எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.கவுக்கு தாவ திட்டமிட்டு உள்ளனர் என்று உளவுத்துறை முதல் மந்திரி குமாரசாமியிடம் அறிக்கை வழங்கி அலறவைத்துள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 104 தொகுதியிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜனதா தளம் (எஸ்) கட்சி கூட்டணி 38 இடங்களிலும் வெற்றி பெற்றன.
எந்த கட்சிக்கும் முழு பெரும்பான்மை கிடைக்காததால் தேர்தலுக்கு பிறகு காங்கிரசும், ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அமைத்தன. மேலும், இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அக்கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து கூட்டணியின் பலத்தை 118 ஆக உயர்த்தியது காங்கிர்சு.
அதன்படி, குமாரசாமி கடந்த 23-ந் தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். துணை முதல்-மந்திரியாக காங்கிரசு தலைவர் பரமேஸ்வர் நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து 25-ஆம் தேதி நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபித்தார். ஆனால் மந்திரிசபை இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை.
முதல்-மந்திரி பதவி உள்பட மொத்தம் உள்ள 34 மந்திரி பதவிகளில் 22 பதவிகள் காங்கிரசும், 12 மந்திரி பதவிகளை ஜனதா தளம் (எஸ்) கட்சியும் பகிர்ந்துகொண்டன. ஆனால், இலாகாக்களை பகிர்ந்து கொள்வதில் இரண்டு கட்சிகள் இடையேயும் இழுபறி நீடிக்கிறது.
இந்த நிலையில், "காங்கிரசில் மந்திரி பதவிக்கு கடும் போட்டி எழுந்துள்ளது. மந்திரி பதவி கிடைக்காவிட்டால், கட்சியை விட்டு விலகுவதாக சில எம்.எல்.ஏ.க்கள் மிரட்டி வருவதாகவும், பா.ஜனதாவில் சேர காங்கிரசை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் தயாராக இருகின்றனர்" என்ண்ட்க்ரு முதல்-மந்திரி குமாரசாமியிடம் மாநில உளவுத்துறை அறிக்கை வழங்கி உள்ளது என்று தகவல் கசிந்துள்ளது.
அந்த எம்.எல்.ஏ.க்கள் தற்போது கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை துணை முதல்-மந்திரி பரமேஸ்வரிடம், குமாரசாமி தெரிவித்து இருக்கிறார். இதனால் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் மந்திரிசபை விரிவாக்கம் தள்ளிப்போகும் என்று தெரிகிறது.