காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்த மு.க.ஸ்டாலின்... காரணம் அழகிரி விடுத்த ஒற்றை அறிக்கை..?

By vinoth kumarFirst Published Jan 13, 2020, 3:50 PM IST
Highlights

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி அமோக வெற்றிபெற்றது. ஆனால், மறைமுக தேர்தலில் உரிய இடம் ஒதுக்கவில்லை என்று திமுக மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி காட்டமாக அறிக்கை ஒன்று வெளியிட்டார். இதனால், திமுக-காங்கிரஸ் கூட்டணி இடையே சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக சார்பில் யாரும் பங்கேற்காதது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நடந்து வரும் மாணவர்கள் போராட்டம், பொருளாதாரம் தற்போதைய அரசியல் நிலை உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்க இன்று எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் சோனியாகாந்தி, மன்மோகன் சிங், ராகுல்காந்தி, குலாம் நபி ஆசாத், ஜார்க்ண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், இடதுசாரி கட்சிகள் சார்பில், டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பாவார், திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

இதையும் படிங்க;-  கே.எஸ்.அழகிரியின் தலைவர் பதவிக்கு குறி வைக்கும் திமுக ஹை கமெண்ட்..! ப.சிதம்பரம் போடும் புதுக் கணக்கு..!

ஆனால், குடியுரிமைச் சட்டம், குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தி வரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிவசேனா, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே புறக்கணிப்பதாக கூறிவிட்டனர். 

இந்நிலையில், தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி அமோக வெற்றிபெற்றது. ஆனால், மறைமுக தேர்தலில் உரிய இடம் ஒதுக்கவில்லை என்று திமுக மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி காட்டமாக அறிக்கை ஒன்று வெளியிட்டார். இதனால், திமுக-காங்கிரஸ் கூட்டணி இடையே சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

click me!