பரோலில் வந்த உடன் ராஜிவ் கொலை தண்டனை கைதி செய்த காரியம்...!! அதிர்சியில் உறைந்த போலீஸ்...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 13, 2020, 3:49 PM IST
Highlights

ஆதார் அடையாள அட்டை கு  ஆன்லைன் மூலம் ஸ்மார்ட் கார்டுக்கு தேவையான ஆவணஙகளை இணைத்து விண்ணப்பம் செய்து புகைப்படம் மற்றும் கை ரேகை வைத்து  ஆதார் அட்டை பெற்றார். 

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து தற்போது, பரோலில் வெளிவந்துள்ள  ரவிச்சந்திரன்  அருப்புக்கோட்டையில் உள்ள கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ததுடன்,  பின் தனக்கு ஆதார் அட்டை பெற்றார்.

 

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவிச்சந்திரன் 15 நாள் சாதாரண பரோலில் சொந்த ஊரான அருப்புக்கோட்டை உள்ள தனது தாய் ராஜேஸ்வரி வசிக்கும் இல்லத்திற்கு  ஜனவரி 10 தேதி வந்தார் . இவருக்கு ஜனவரி 10முதல் 25 தேதி வரை மதுரை உயர்நீதிமன்ற கிளை அவருக்கு சாதரண பரோல் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று ரவிச்சந்திரன் அருப்புக்கோட்டையில் உள்ள நாடார் சிவன் கோவில் , மற்றும் சொக்கலிங்கபுரம் பகுதியில் உள்ள சிவன் கோவில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து 

வருவாய் வாட்டசியர் அலுவலகத்தில் உள்ள இ சேவை மையத்திற்கு சென்ற அவர்.  தனக்கு  ஆதார் அடையாள அட்டை கு ஆன்லைன் மூலம் ஸ்மார்ட் கார்டுக்கு தேவையான ஆவணஙகளை இணைத்து விண்ணப்பம் செய்து புகைப்படம் மற்றும் கை ரேகை வைத்து  ஆதார் அட்டை பெற்றார்.  பின்பு  பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது இல்லத்திற்கு திரும்பினார்.  
 

click me!