ராகுல்காந்தியின் தோழியான தமிழக பெண் எம்.பி.யின் பெரும் புலம்பல்: ஒட்டி நின்னு போஸ் கொடுக்காதது ஒரு குத்தமாய்யா?

By Vishnu PriyaFirst Published Jan 13, 2020, 3:30 PM IST
Highlights

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக காங்கிரஸுக்கு, தி.மு.க. பிரித்துக் கொடுத்த தொகுதிகளில் யாருக்கு ஸீட் என்பது பற்றி காரசார ஆலோசனை நடந்தது. ஆனால், யாருக்கெல்லாம் ஸீட் கொடுக்கவே கூடாது! என்பது பற்றிய அலசலில் அடிதடியே நடக்குமளவுக்கு போனது.
 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக காங்கிரஸுக்கு, தி.மு.க. பிரித்துக் கொடுத்த தொகுதிகளில் யாருக்கு ஸீட் என்பது பற்றி காரசார ஆலோசனை நடந்தது. ஆனால், யாருக்கெல்லாம் ஸீட் கொடுக்கவே கூடாது! என்பது பற்றிய அலசலில் அடிதடியே நடக்குமளவுக்கு போனது.

எந்த காரணத்திலும் இவருக்கு ஸீட் கொடுக்க கூடாது! என்று சொந்த கட்சியினராலேயே சூனியம் வைத்துப் பேசப்பட்டவர் ஜோதிமணி. கரூர் மாவட்ட காங்கிரஸை சேர்ந்த பெண்மணி இவர். ஆனால் செம்ம அசால்டாக ஸீட் வாங்கி வந்தார் ஜோதிமணி. அவருக்கு ஸீட் கிடப்பதற்கான காரணங்களில் மிக முக்கிய்மாக சொல்லப்பட்டது ‘அவர் ராகுல்காந்தியின் தோழி!’ என்பதுதான்.

 

அது உண்மையும் கூட. இது பற்றி அப்போது பேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் ‘பா.ஜ.க.வுக்கு எதிராக முரண்டு பிடித்து, முஸ்டி முறுக்கும் மாநிலங்களில் மிக முக்கியமானது தமிழகம். எனவே தமிழகத்தில் அரசியலின் உண்மையான நிலையை தெரிந்து கொள்ள சில நபர்களை தனது நெருங்கிய வட்டாரத்தில் வைத்திருக்கிறார் ராகுல்காந்தி. அவர்களில் ஒருவர்தான் ஜோதிமணி.  இளம் மற்றும் தைரியமான நிர்வாகி என்பதால் ஜோதிமணி மீது எப்போதும் அவருக்கு ஒரு நம்பிகை உண்டு. அந்த அடிப்படையிலேயே ஸீட் கொடுத்தார்.’ என்றார்கள். 

எது எப்படியோ ஜோதிமணி கரூர் லோக்சபா தொகுதியில் நின்றார், வென்றார். 

இந்த நிலையில்  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் உள்ளாட்சி தேர்தலின் பஞ்சாயத்து ஒன்றில் ஜோதிமணியின் தலையை தாறுமாறாக உருட்டுகின்றனர் தி.மு.க.வினர். 

அதாவது அம்மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் தி.மு.க. அப்படியொன்றும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், ஈச்சநத்தம் ஊராட்சியின் தலைவராக ராமசாமி என்பவர் வெற்றிபெற்றுவிட்டார் தி.மு.க.சார்பில். அவர் இது குறித்து வாழ்த்துப் பெற அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜியிடமும், கரூர் எம்.பி. ஜோதிமணியிடம் சென்றிருக்கிறார். 

அதுவும் ஜோதிமணியை சந்திக்க செல்கையில் வட்டார காங்கிரச் தலைவரோடும் சென்றிருக்கிறார். அப்போது, வெற்றி பெற்று வந்திருக்கும் தலைவரை வாழ்த்திட தன் மேசை, நாற்காலியை விட்டு வெளியே வராமல், அப்படியே உள்ளேயே நின்றபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டார் ஜோதிமணி. 

இதுதான் இப்போது பெரிய விவகாரமாகிவிட்டது அரவக்குறிச்சி தி.மு.க.வில். “அந்தம்மா ஸீட் வாங்கினது லோக்கல் காங்கிரஸ்காரனுங்களுக்கே பிடிக்கலை. ஆனால் நாங்க கஷ்டப்பட்டு உழைச்சு ஜெயிக்க வெச்சோம். எம்.பி.யான பிறகு எங்களை மதிக்கிறதே இல்லை. என்னமோ மனு கொடுக்க வந்த பொதுசனத்துட்ட கோரிக்கை பேப்பரை வாங்குற மாதிரி நின்னு போஸ் கொடுத்திருக்குறாங்க. வெளியே வந்து வாழ்த்த கூடாதோ? என்ன இந்தம்மா பெரிய சோனியாம்மாவா?” என்று குதிக்கின்றனர். ’ஜெயிக்க வைத்து, அரசியல் அடையாளம் கொடுத்த தி.மு.க.விடம் நன்றி மறந்த ஜோதிமணி’ என்று வாட்ஸப்பிலும் திட்டி தீர்க்கின்றது தி.மு.க. 

இதைப் பார்த்துவிட்டு லோக்கல் காங்கிரஸாரோ ‘நாங்கதான் அப்பவே சொன்னோம்ல அந்தம்மாவை பத்தி. நீங்க தோள் கொடுத்து ஜெயிக்க வெச்சீங்க. இப்ப  கொதிக்கிறீங்க!’ என்று நக்கலடித்திருக்கின்றனர். 

இந்த விவகாரம் எம்.பி. ஜோதிமணியின் காதுகளுக்குப் போக “அடப்பாவமே! மேஜையை, நாற்காலியை விட்டு வெளியில வந்து நிற்காதது ஒரு குத்தமா? இதுக்கா இப்படி என்னை வறுத்து எடுக்குறீங்க?” என்று புலம்பிக் கொட்டுகிறார். அவரது ஆதரவாளர்களோ....”ஒரு பெண் எம்.பி.யான அவர் நாகரிகமா தள்ளி நின்று வாழ்த்து சொன்னது ஒரு தவறா? ஆண்களோடு சேர்ந்து நின்னா போஸ் கொடுக்கணும்?” என்கின்றனர். 

பஞ்சாயத்து தலைவராகி, வாழ்த்து வாங்க சென்ற ராமசாமியோ “அய்யோ அந்தம்மா  பண்ணுனதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அவங்க எவ்வளவு பெரிய எம்.பி., நான் வெறும் ஊராட்சி தலைவர் தானே!” என்கிறார். 
சரிதான்!

click me!