காங்கிரஸ்: கட்சிக்கு ஜிகே.மூப்பனார்; ஆட்சிக்கு பிரணாப்முகர்ஜி கடந்து வந்த பாதை.! இந்திராவை கவர்ந்த பிரணாப்.!

By T BalamurukanFirst Published Sep 1, 2020, 10:51 AM IST
Highlights

காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் பிரணாப்முகர்ஜி. இந்திராகாந்தி அமைச்சரவையைிலும் சரி கட்சியிலும் சரி நம்பிக்கைக்குரியவராக பிரணாப் இருந்தார்.

பிரணாப்முகர்ஜி கடந்த 21 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. 84 வயதான முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார். அவர் நீண்ட நாட்களாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அன்றிலிருந்து அவர் கோமா நிலையில் இருந்தார். அவரது மரணம் அனைத்து கட்சித் தலைவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 


காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் பிரணாப்முகர்ஜி. இந்திராகாந்தி அமைச்சரவையைிலும் சரி கட்சியிலும் சரி நம்பிக்கைக்குரியவராக பிரணாப் இருந்தார். ஜிகே.மூப்பனார் பிரணாப் ஆகிய இருவரும் கட்சிக்கு முக்கிய தூண்களாக இருந்தார்கள். கட்சியில் பிரச்சனை என்றால் மூப்பனார் பார்த்துக்கொள்வார்; ஆட்சியில் பிரச்சனை வந்தால் பிரணாப் பார்த்துக்கொள்வார் என்கிற அளவில் இருந்தார்கள். பிரணாப் மத்திய அமைச்சரவையில் அனைத்து பதவிகளையும் பெற்றவர். எதிர்கட்சிகள் கூட பிரணாப் என்றால் தனி மரியாதை வைத்திருப்பார்கள்.

முன்னதாக திங்கள்கிழமை காலை, பிரணாப் முகர்ஜியின்  உடல்நிலை மோசமடைந்தது என்று மருத்துவமனை மருத்துவ புல்லட்டின் ஒன்றை வெளியிட்டது. நுரையீரல் தொற்று காரணமாக அவர் செப்டிக் அதிர்ச்சி நிலைக்குச் சென்றதாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனை தெரிவித்துள்ளது. முகர்ஜி கடந்த 21 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது குறிப்பிடத்தக்கது.முகர்ஜியின் உடல்நிலை கடந்த வாரம் கொஞ்சம் மேம்பட்டது, ஆனால் நுரையீரல் தொற்றுக்குப் பிறகு அவரது நிலை மீண்டும் மோசமடைந்தது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி முகர்ஜி அவசர அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, ​​அவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் தெரிய வந்தது. அப்போதிருந்து, அவரது உடல்நிலை எந்த முன்னேற்றமும் இல்லை.

அவரது அரசியல் பயணம்!
1969: முதல் முறையாக மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் அவர் பேசிய பேச்சு இந்திராகாந்தியை கவர்ந்தது. அதன் விளைவாகத்தான் இந்திராகாந்தி மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கினார். அதன் பிறகு அவரது திறமையை கண்டு வியந்து பல்வேறு பதவிகளை வழங்கினார் இந்திராகாந்தி.
1973: முதல் மத்திய அமைச்சர் 
1984: முதல் அமைச்சரவை அமைச்சராக பதவியேற்றார். ராஜிவ் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து விலகி தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்தவர்.சில வருடங்கள் கழித்து மீண்டும் காங்கிரஸ் கட்சியில் கட்சியை இணைத்துக்கொண்டார்.ராஜீவ்காந்தி படுகொலைக்கு பிறகு 6வருட காலங்கள் தனியாக ஒதுங்கி இருந்த சோனியா காந்தியை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்த தலைவர்களில் முதன்மையானவர் பிரணாப். 
2004: முதல் மக்களவை எம்.பி. 

பிரணாப்புக்கு அளிக்கப்பட்ட விருதுகள்..
2019: பாரத் ரத்னா 
2008: பத்மா விபூஷன் 
1997: சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் 
1984: சிறந்த நிதி மந்திரி 

1969 முதல் 2017 வரை - அரசியல் வாழ்க்கை:
1969 முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினர்
1973 இந்திரா காந்தி அரசாங்கத்தில் துணை அமைச்சர்
1975 இரண்டாவது முறை மாநிலங்களவை எம்.பி.
1981 மூன்றாவது முறையாக மாநிலங்களவை எம்.பி.
1984 இந்திரா காந்தி அரசாங்கத்தில் நிதியமைச்சர்
1984 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் உலகின் சிறந்த நிதி மந்திரி
1991 திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர்
1993 நான்காவது முறையாக மாநிலங்களவை எம்.பி.
1995 நரசிம்மராவ் அரசாங்கத்தில் வெளியுறவு மந்திரி
1999 ஐந்தாவது முறையாக மாநிலங்களவை எம்.பி.
2004 முதல் முறையாக மக்களவை எம்.பி.
2004 யுபிஏ -1 அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சர்
2006 யுபிஏ -1 அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சர்
2009 யுபிஏ -2 அரசாங்கத்தில் நிதி அமைச்சர்
2012 இந்தியாவின் 13 வது ஜனாதிபதியானார்
2017 ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடைகிறது.மேற்கு வங்கத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கிடைத்த பொக்கிஷம் பிரணாப் என்று புகழாரம் சூட்டி மகிழ்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.

click me!