
நுபுர் சர்மா சர்ச்சை
முகமது நபிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது. அவரால் தான் நாடு முழுவதும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்களுக்கு வழிவகுத்தது என்றும், இது மக்களின் உணர்வுகளைத் தூண்டியது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. ஒட்டுமொத்த நாடும் பற்றி எரிவதற்கு நுபூர் சர்மா தான் காரணம்.
மேலும் செய்திகளுக்கு.. Online Fraud : மின் கட்டணம் செலுத்துங்க..வைரல் வாட்சப் லிங்க் -மக்களே உஷார்.!
தனது செயல்பாட்டிற்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும். நுபுர் சர்மாவிற்கு எதிராக பல எஃப்ஐஆர்கள் இருந்தபோதிலும் அவரை ஏன் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்படவில்லை ? என நுபுர் ஷர்மா குறித்து சரமாரியாக உச்ச நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியதை அடுத்து, எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசை குறிவைத்து வருகின்றது.
காங்கிரஸ்
நுபுர் சர்மா விவகாரத்தில் ஆளும் கட்சி வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். நுபுர் சர்மாவுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்குப் பிறகு ஒரு அறிக்கையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘அழிவுபடுத்தும் வகையில் பிளவுபடுத்தும் சித்தாந்தங்களை’ எதிர்த்துப் போராடுவதற்கான கட்சியின் தீர்மானத்தை நீதிமன்றம் பலப்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. அதிமுக பொதுக்குழு கூட்டத்தை முதல்வர் தடுக்க வேண்டும்.. அதிமுகவில் எழுந்த புது சர்ச்சை!
நபிகள் நாயகம்
இந்திய உச்ச நீதிமன்றம் முக்கியமான மற்றும் தொலைநோக்குப் பார்வைகளை அளித்துள்ளது. இறைதூதர் நபிகள் நாயகம் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் கருத்து தெரிவித்திருப்பது மிகவும் சரியானது.
நாடு முழுவதும் எதிரொலிக்கும் உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்துகள், நுபுர் சர்மா விவகாரத்தில் ஆளும் கட்சி வெட்கித் தலைகுனிய வேண்டும். இனவாத உணர்வுகளைத் தூண்டி ஆதாயம் தேட பாஜக முயல்கிறது என்பது இரகசியமல்ல. இன்று, இந்த அழிவுகரமான பிளவுபடுத்தும் சித்தாந்தங்களை எதிர்த்துப் போராடும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் உறுதியை உச்ச நீதிமன்றம் வலுப்படுத்தியுள்ளது’ என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு.. சரவணா ஸ்டோர்ஸுக்கு சொந்தமான ரூ.234 கோடி முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி !