முன்னாடியே வந்து கெத்தா உட்கார்ந்த EPS.. மேடைக்கே வராமல் ஒதுங்கி நின்ற OPS.. பாஜக நிகழ்ச்சியில் பரிதவிப்பு.

Published : Jul 02, 2022, 04:39 PM ISTUpdated : Jul 02, 2022, 04:50 PM IST
முன்னாடியே வந்து கெத்தா உட்கார்ந்த EPS.. மேடைக்கே வராமல் ஒதுங்கி நின்ற OPS.. பாஜக நிகழ்ச்சியில் பரிதவிப்பு.

சுருக்கம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் தனியா நட்சத்திர ஓட்டலில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் திரௌபதி முர்மு ஆதரவு கோரும் கூட்டம் நடைபெற்று வருகிறது. 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் தனியா நட்சத்திர ஓட்டலில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் திரௌபதி முர்மு ஆதரவு கோரும் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ்-ஈபிஎஸ் கலந்து கொண்டுள்ளனர். இதனால் அந்த கூட்ட அரங்கில் கூட்டம் அலைமோதுகிறது. இரு தலைவர்களும் ஒரே மேடையில் கலந்து கொண்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி காலம் முடிந்ததையடுத்து ஜூலை 18-ஆம் தேதி நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வாக்குகள் 21 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சியின் சார்பில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மேகாலயா முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சிங்ஹா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் இரு தலைவர்களும் நாடு முழுவதும் தங்களுக்கு ஆதரவான கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளான பாமக, பாஜக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சி தலைவர்களின் ஆதரவை திரௌபதி முர்மு தற்போது கோருகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் 75 சட்டமன்ற உறுப்பினர்களும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். அதிமுகவைச் சேர்ந்த 66 சட்டமன்ற உறுப்பினர்கள்,  5 பாமக சட்டமன்ற உறுப்பினர்கள், 4 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் அவரிடம் ஆதரவு கோருகிறார். இந்த நிகழ்ச்சி நடக்கும் தாஜ் நட்சத்திர ஹோட்டலுக்கு முர்மு வருகை தந்துள்ளார். அவருடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்- இணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அவரது ஆதரவாளர்கள் புடைசூழ வருகை தந்திருப்பதால் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் கூட்டம் அலைமோதுகிறது.

ஏற்கனவே இபிஎஸ் மேடையில் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்துள்ளார். ஓபிஎஸ் இபிஎஸ் ஒரே அரங்கில் நேருக்கு நேர் சந்திக்கும் வகையில் ஒரே மேடையில் அமர்ந்திருந்தது அங்கிருந்த அனைவரிட் கவனமும் அவர்கள் மீதே இருந்தது. இதனால் நிகழ்ச்சி நடைபெறும் நட்சத்திர விடுதியில் பரபரப்பு அதிகரித்து காணப்பட்டது. 
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!