குண்டு போடுவோம் என தமிழக அரசை மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர்.! இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிடுக-செல்வப்பெருந்தகை

By Ajmal Khan  |  First Published Feb 22, 2023, 10:29 AM IST

தமிழக அரசுக்கும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக தான் ஒரு ஓய்வுபெற்ற ராணுவவீரர் என்றும் கருதாமலும், சமூக அக்கறையில்லாமலும், பொறுப்பில்லாமலும் பொதுவெளியில் பேசிய  அநாகரீகமான, ஆபத்தான பேச்சுகளை உடனடியாக காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.


ராணுவ வீரர் கொலை- போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி  பகுதியில், குடிதண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்ததில் ஏற்பட்ட மோதல் காரணமாக ராணுவ வீரர் பிரபு அடித்துக்கொல்லப்பட்டார். இதனையடுத்து கொலை சம்பவத்தில் தொடர்புடைய திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். ராணுவ வீரர் கொலை சம்பவத்தை கண்டித்து பாஜகவின் முன்னாள் ராணுவ பிரிவு சார்பாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், முன்னார் ராணுவ வீரருமான பாண்டியன் பேசுகையில்,  தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்,

Tap to resize

Latest Videos

திமுகவுக்கு நெருக்கடி.. ஆளுநரை தொடர்ந்து அமித்ஷாவை சந்திக்கும் அண்ணாமலை..! அதிர்ச்சியில் ஸ்டாலின்

குண்டு போடுவோம்- சர்ச்சை பேச்சு

உலகத்திலேயே மிகப்பெரிய ஒழுக்கமானது இந்திய ராணுவம், அப்படிப்பட்ட ராணுவ வீரர்களை சீண்டினால் அது தமிழகத்திற்கு நல்லதல்ல, தமிழக அரசுக்கும் நல்லதல்ல, நாங்கள் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் ஒழுக்கமாக செய்பவர்கள், அப்படிப்பட்ட எங்களுக்கு பரிட்சை வைத்து  பார்க்க நினைத்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருக்காது. இங்கு அமர்ந்திருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு குண்டு வைப்பதில் கெட்டி காரர்கள், சுடுவதில் கெட்டிக்காரர்கள், சண்டையிடுவதில் கெட்டிக்காரர்கள், ஆகையினால் இந்த வேலைகள் எங்களுக்கு நன்றாக தெரியும், எனவே எங்களை இதனை செய்ய வைத்து விடாதீர்கள் என தமிழக அரசு எச்சரிக்கை செய்வதாக கூறினார். இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

களங்கம் கற்பிக்க திட்டம்

இது தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிப்ரவரி 8ஆம் தேதியன்று கிருஷ்ணகிரியில் அண்டை வீட்டார்களுடன் ஏற்பட்ட அடிதடி பிரச்சனையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து ராணுவவீரர் பிரபு அவர்கள், பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி இறந்துவிடுகிறார். உடனே, தமிழ்நாடு காவல்துறையினர் கொலை வழக்காக மாற்றி, வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்துள்ளார்கள். ஆனால், தமிழ்நாடு பா.ஜ.கவினர், வேண்டுமென்றே இந்த அடிதடி பிரச்சனையை திசைத்திருப்பி,ஆளும் தி.மு.கழக அரசின் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கத்துடன் வீணான பழி சுமத்தி அரசியல் லாபம் அடைய நினைக்கின்றார்கள். 

ஏபிவிபி அமைப்பை தடை செய்ய வேண்டும்.. வன்முறைக்கு பல்கலை துணை நிற்பதா? வேல்முருகன் ஆவேசம்

பொறுப்பில்லாத பேச்சு

இந்தநிலையில் நேற்று தமிழ்நாடு பா.ஜ.கவினர் சென்னையில் நடத்திய பொதுக்கூட்டத்தில் பேசிய ஓய்வுபெற்ற கர்னல் பாண்டியன் அவர்கள், எங்களுக்கும் குண்டு போட தெரியும், சுட தெரியுமென்றும், தமிழ்நாட்டிற்கும், தமிழக அரசுக்கும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக தான் ஒரு ஓய்வுபெற்ற ராணுவவீரர் என்றும் கருதாமலும், சமூக அக்கறையில்லாமலும், பொறுப்பில்லாமலும் பொதுவெளியில் இதுபோல் பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிடுக

இதுபோன்ற அநாகரீகமான, ஆபத்தான பேச்சுகளை உடனடியாக காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். இல்லாவிட்டால், இவ்வாறு பேசுவது வழக்கமாகிவிடும். மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் இதுகுறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்வதாக செல்வப்பெருந்தகை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

கமலாலயம் கடல் போலத் தோற்றமளிக்கும் ஆனாலும் அது குளம்தான்- பாஜகவை சீண்டும் மு.க.ஸ்டாலின்

 

click me!