தமிழக சட்ட மசோதாவை காலம் தாழ்த்தும் ஆளுநர்... ஆணவ, அராஜகப் போக்கை காட்டுகிறது- சீறும் செல்வப்பெருந்தகை

By Ajmal Khan  |  First Published Dec 1, 2023, 2:13 PM IST

தமிழ்நாட்டில் ஆளுநராக பதவியேற்ற நாள் முதல் இன்றுவரை தமிழ்நாட்டின் மக்களின் நலனுக்கும், அரசமைப்புச் சட்ட விதிகளுக்கும் எதிராகவே செயல்பட்டு வருகிறார் என்பது அனைவருக்கும் புரியும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 


சட்டமசோதாவை காலம் தாழ்த்தும் ஆளுதர் ரவி

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் கொடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஓப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிய 10 மசோதாக்களையும் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Tap to resize

Latest Videos

தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக சட்டமன்றத்தில் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை வேண்டுமென்றே, காலம் தாழ்த்தும் நோக்கத்தில் ஆளுநரின் இந்த செயல் அவரின் ஆணவ, அராஜகப் போக்கைக் காட்டுகிறது. ஆளுநர் இந்த நடவடிக்கை, 

மக்கள் நலனுக்கு எதிராக ஆளுநர் ரவி

தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கோ, அவர் சார்ந்த கட்சிக்கோ எதிரானது அல்ல. அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எதிரானது. மக்களின் அதிகாரத்தை ஆளுநர் ஒரு சர்வாதிகாரி போல பறித்துக் கொள்ளப் பார்க்கிறார் என்பதே ஆளுநரின் செயல் உணர்த்துகிறது.  இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 159-இன்படி, ஆளுநர் எடுத்த பிரமாணத்தின் வாக்கியங்களில் உள்ள உறுதிமொழியானது, இந்திய அரசமைப்புச்சட்டத்தை பாதுகாப்பது என்பதாகும். ஆளுநர்களின் பணிக்காலத்தில் மக்கள் நலனுக்குரிய கடமைகளைச் செய்து,

மாநில மக்களின் நல்வாழ்வுக்குரிய பணி செய்தல் அவசியமாகும். ஆனால், தமிழ்நாட்டில் ஆளுநராக பதவியேற்ற நாள் முதல் இன்றுவரை தமிழ்நாட்டின் மக்களின் நலனுக்கும், அரசமைப்புச் சட்ட விதிகளுக்கும் எதிராகவே செயல்பட்டு வருகிறார் என்பது அனைவருக்கும் புரியும்.

அரசியல்வாதியாக செயல்படும் ஆளுநர் ரவி

மக்கள் நலனைப் புறந்தள்ளிவிட்டு, மக்களாட்சிக்கு பதிலாக, எதிர்விளைவுகளில் ஈடுபடுவது ஜனநாயக விரோதமாகும். அரசமைப்பு சட்ட மாண்பினை வேண்டுமென்றே மீறி செயல்படுவது குற்றம் என்பதை ஆளுநர் உணரவேண்டும். அதைவிடுத்து ஒன்றிய அரசின் முகத்தை தமிழ்நாட்டில் பிரதிபலிக்கும் கண்ணடியாக ஆளுநர் அரசியல்வாதி போல செயல்படுவது போட்டி அரசாங்கம் என்ற ஆபத்தை உருவாக்கி விடும் என்பதை ஆளுநர் உணரவேண்டும் என செல்வப்பெருந்தகை கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிக்கவே ஆளுநர் ரவி இப்படி செய்கிறார்.. அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!

click me!