வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக வேண்டும் என்பது எனது ஆசை, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக வேண்டும் என்பது எனது பேராசை என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ராஜிவ்காந்தியை கொன்றவர்களை ஒருபோதும் மன்னிக்கவே முடியாது. ராஜிவ் காந்தியை கொன்றது கொடூரமான செயல். அதனை ஒரு போதும் காங்கிரஸ் தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள். விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
Al தொழில்நுட்ப உதவியோடு யார் வேண்டுமானும் எந்த படத்தை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேச வைக்கலாம். யார் எங்கே உயிரோடு இருக்கிறார்கள் என்பதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எல்டிடியை ஆதரித்து தான் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் அவசியம் இல்லை.
திமுக இளைஞரணி மாநில மாநாடு; ஸ்டாலின், துரைமுருகனை நேரில் சென்று அழைத்த இளைஞரணி செயலாளர்
ஆசை பேராசை இரண்டுமே எனக்கு உண்டு. வரும் நாடாளுமன்ற தேர்தலில் எம்பியாக போட்டியிடவும் ஆசை உள்ளது, தமிழக காங்கிரன் தலைவராக பொறுப்பேற்க பேராசையும் உள்ளது. கடந்த 50 ஆண்டு காலமாக தமிழகத்தில் மழை நீர் செல்வதற்கு முறையான வாய்க்கால்கள் இல்லை. இனி வரும் காலங்களில் ஆவது செகண்டரி ஸ்டோரேஜ் முறையை அரசு அறிமுகப்படுத்தி அதற்குண்டான வேலைகளை செய்ய வேண்டும்.
10 ஆண்டுகளாக பாஜகவோடு அதிமுக கூட்டணியில் இருந்து விட்டு சில காலங்களாக கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டோம் என்று கூறுகின்றனர். சிறுபான்மையினர் மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர். சிறுபான்மையினரின் வாக்கு காங்கிரஸ் எந்த கூட்டணியில் உள்ளதோ அவர்களுக்குத்தான் உண்டு. அமலாக்கத் துறையை கட்டுப்படுத்த வேண்டிய கடமை நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆளுநர் விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் திட்டங்களை முடக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையது என உச்சநீதிமன்றமே குறிப்பிட்டுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என்பது ஒரு ஆருடம் தான். என்னுடைய கணிப்பு படி 5 மாநில இடைத்தேர்தலில் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெரும் என்று தெரிவித்துள்ளார்.