தோல்வியில் முடிந்த நம்பிக்கையில்லா தீர்மானம் - குஷியில் தனபால்

Asianet News Tamil  
Published : Mar 23, 2017, 12:22 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
தோல்வியில் முடிந்த நம்பிக்கையில்லா தீர்மானம் - குஷியில் தனபால்

சுருக்கம்

confidence motion against dhanabal failed in assembly

கடந்த 16ம் தேதி எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முறையிட்டனர்.

அதன்படி கடந்த மாதம் 18ம் தேதி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, ரசிகய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். அதனை, சபாநாயகர் தனபால், ஏற்கவில்லை. இதனால், சட்டமன்றத்தில் அமளி ஏற்பட்டது.

இதையடுத்து சட்டமன்ற பாதுகாவலர்களால், ஸ்டாலின் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அப்போது, அவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சட்டமன்ற செயலாளரிடம் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாக கூறினார். 

இந்நிலையில் இன்று சட்டமன்ற கூட்டம் கூடியது. அதில், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, முன் மொழிந்தார். அப்போது, சபாநாயகர் தனபால் பதவியில் இருந்து நீக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த நம்பிக்கை இல்லா தீர்மானம், ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

ஆய்வுக்கு பின், சபாநாயகர் மீது கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு 90 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். மற்றவர்கள், யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால், மு.க.ஸ்டாலின் தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

PREV
click me!

Recommended Stories

MK Stalin: வெற்றி பெற்றதற்காக ஒரு நன்றியை கூட சொல்லாத காங்கிரஸ்..! முதல்வர் பரபரப்பு ட்வீட்..
TN CM Vijay: ஜோசப் விஜய் எனும் நான்..! நாளை காலை 10 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் விஜய்..