ஓபிஎஸ் - டிடிவி தினகரன் சந்திப்பு எடப்பாடி பழனிசாமி அணியினரிடையே பெரும் கலக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறது.
தமிழகத்தின் தென்மண்டலங்களில் செல்வாக்கு நிறைந்த ஓபிஎஸ்ஸூக்கு, கொங்கு மண்டலத்தில் பெருவாரியான ஆதரவு இல்லை என்று கூறப்படுகிறது. அதேபோல கொங்கு மண்டலத்தில் இருப்பதை போலவே, எடப்பாடி பழனிசாமிக்கு தென்மண்டலங்களில் பெரும்பான்மையான அளவுக்கு ஆதரவு இல்லை என்றும் கூறப்படுகிறது.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு பிறகு வலிமையான அதிமுகவை தமிழகம் முழுக்கு கட்டி காப்பாற்றும் அளவுக்கு இன்னும் இரண்டு பேர் வளரவில்லை என்று அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. அதனை உணர்த்தும் விதமாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரும் பல்வேறு முயற்சிகளில் இறங்கி உள்ளனர். ஓபிஎஸ் - டிடிவி தினகரன் சந்திப்பு எடப்பாடி பழனிசாமி அணியினரிடையே பெரும் கலக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறது.
இதனால் அடுத்தடுத்து வேலைகளில் மும்முரமாக இறங்கி விட்டனர் ஓபிஎஸ் தரப்பினர். ஓபிஎஸ் தரப்பு கொங்கு மண்டலத்தில் முகாமிட, சும்மா இருக்குமா எடப்பாடி தரப்பு ? அவர்களும் தென் மண்டலத்தில் முகாமிட்டுள்ளனர். இரு தரப்பும் வரிசையாக பொதுக்கூட்டம், மாநாடு என நடத்த திட்டம் தீட்டியுள்ளனர். வன்னியர் இடஒதுக்கீட்டு விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி மீது, முக்குலத்தோர் சமூகத்தினர் கோபமாக உள்ள நிலையில் எடப்பாடி மீதான அதிருப்திகள் அதிகரித்துள்ளது.
இவைகளை போக்கவே, தென்மண்டலத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் கவனம் தற்போது திரும்பி வருகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கொங்கு மண்டலமான நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் ஒபிஎஸ் அணி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமுமான தங்கமணியின் தொகுதியில் இது நடைபெற்றது.
அதில் பேசிய முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான வைத்தியலிங்கம், “அடிமட்ட தொண்டர்களால்தான் பொதுச் செயலர் பதவிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அறிவித்தார். அதையே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் பின்பற்றினார். ஆனால் தற்போது, 10 மாவட்ட செயலர்களை ஒப்புவிக்க வைத்து பொதுச்செயலர் ஆகியிருப்பது சரியல்ல.
இதையும் படிங்க..2000 ரூபாய் நோட்டு: சீறிய முதல்வர் ஸ்டாலின்.! திமுகவினரின் சாராய ஆலை விவகாரத்தை தூசி தட்டும் அண்ணாமலை
தோல்வியை காணாத கட்சிக்கு இதுவரை 9 முறை தோல்வியை பெற்று தந்துள்ளார். கர்நாடக வேட்பாளரை வாபஸ் பெற வைத்து, பாஜகவிற்கு ஆதரவு கொடுத்து உள்ளார். ஒபிஎஸ் மரியாதைக்குரிய நபர். சேலத்தில் விரைவில் மாநாடு நடைபெறவுள்ளது. அதில் நீங்கள் பெருமளவில் பங்கேற்று வெற்றி பெற செய்யவேண்டும்.
அவர் பசு தோல் போர்த்திய புலி அல்ல, யார் எப்படி போனாலும், தன் பதவியை தக்க வைக்க புத்திசாலித்தனமாக செயல்படும் நரி” என்று பேசினார். நாளுக்கு நாள் அதிமுகவை கைப்பற்ற ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தரப்பும் செய்யும் நடவடிக்கைகள் அதிமுக தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..Video: திடீரென படியில் விழுந்து வணங்கிய கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவக்குமார் - ஏன் தெரியுமா?