
சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் சசிகலாவிற்கு கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் உடல்நலம் குன்றியிருக்கும் அவரது கணவரைக் காண பரோல் வழங்கப்பட்டுள்ளது. பரோலில் வெளிவந்துள்ள சசிகலாவுக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம், கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.
சசிகலாவுக்கு சிறை நிர்வாகம் விதித்துள்ள நிபந்தனைகள்..!
1. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடராஜனை மட்டுமே சசிகலா சந்திக்க வேண்டும். பரோல் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட வீட்டில் மட்டுமே இருக்க வேண்டும்.
2. வீட்டிலோ மருத்துவமனையிலோ வேறு யாரையுமே சந்திக்கக்கூடாது.
3. அரசியல் நடவடிக்கைகளிலோ கட்சி நடவடிக்கைகளிலோ ஈடுபடக்கூடாது.
4. ஊடகங்களை சந்திக்கவோ எந்த கருத்தும் தெரிவிக்கவோ கூடாது.
இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.