சசிகலா இங்குதான் தங்குகிறார்...!

 
Published : Oct 06, 2017, 03:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
சசிகலா இங்குதான் தங்குகிறார்...!

சுருக்கம்

Sasikala stayed here ...!

ஏழு மாத சிறை வாசத்துக்குப் பிறகு, பரோலில் வரும் சசிகலா, சென்னை, தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. 

கடந்த 7 மாதமாக சசிகலா சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில், அவரின் கணவர் நடராசனுக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தாம்பரம் அருகே மேடவாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் நடைபெற்றது.

சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராசனைப் பார்ப்பதற்காக, சசிகலா, பெங்களூரு சிறைத்துறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சசிகலாவுக்கு இன்று பரோல் அளிக்கப்பட்டது.

பரோலில் வெளிவரும் சசிகலா, விமானம் மூலம் சென்னை வருவதாக முன்பு கூறப்பட்டது. தற்போது அவர், கார் மூலமாக சென்னை வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும், சென்னை வரும் சசிகலா, இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்காக கிருஷ்ணப்ரியாவின் வீட்டுக்கு முன்பு சசிகலாவை வரவேற்கும் வகையில் பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!