முழு அடைப்பு போராட்டம் அமைதி வழியில் நடத்தி வெற்றிபெற வேண்டும் - முக ஸ்டாலின் வேண்டுகோள்...

 
Published : Apr 24, 2017, 09:03 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
முழு அடைப்பு போராட்டம் அமைதி வழியில் நடத்தி வெற்றிபெற வேண்டும் - முக ஸ்டாலின் வேண்டுகோள்...

சுருக்கம்

Complete shutters should be conducted in a peaceful manner

நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டம் அமைதி வழியில் நடத்தி விவசாயிகளின் கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் 41 நாட்களாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

விவசாயிகளுக்கு ஆதராவாக அனைத்துகட்சினர் சார்பில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த போராட்டத்தில் ஸ்டாலின், திருநாவுகரசர், திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதற்காக எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முழு அடைப்பு போராட்டத்தை அமைதி வழியில் நடத்தி கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டும்.

யார் தூண்டுதலுக்கும் இடம் கொடுக்காமல் முழு அடைப்பை ஜனநாயக முறையில் நடத்த வேண்டும்

தமிழக விவசாயிகளின் கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற உள்ளது.

நாளை நடைபெறும் போராட்டம் 200% வெற்றி பெறும்.

ஜனநாயக முறையில் அனைத்து கட்சியினரும் போராட்ட களத்தில் செயலாற்ற வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!