
அச்சம் மற்றும் பொறாமையின் காரணமாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் 41 நாட்களாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக நலன்கள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன் வைத்துள்ளதாக தெரிவித்தார்.
இதைதொடர்ந்து விழா ஒன்றில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டத்தில் எடப்பாடி எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், அச்சம் மற்றும் பொறாமையின் காரணமாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அச்சம் மற்றும் பொறாமையின் காரணமாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார்.
அரசுக்கு நல்லபெயர் வந்துவிட்டது என்ற அச்சத்தால் ஆதாரமின்றி பேசியுள்ளார்.
மாநிலத்தின் பிரச்சனைகள் குறித்து நிதி ஆயோக் கூட்டத்தில் பேசினேன்.
ஸ்டாலினுக்கு தெரிகிறதோ இல்லையோ, மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
இவ்வாறு கூறியுள்ளார்.