சீமான் கலவரத்தை உண்டாக்கும் எண்ணத்தில் செயல்படுகிறார் - காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்

By Velmurugan s  |  First Published Aug 4, 2023, 8:48 AM IST

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கிறிஸ்தவர் மற்றும்  இஸ்லாமியர்களை தேவனின் பிள்ளைகளாக நினைத்திருந்தோம், ஆனால் அவர்கள் சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக சிறுபான்மையின மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சீமானின் கருத்து தொடர்பாக பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் சீமானும், நான் அனைத்து இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் குறிப்பிடவில்லை அநீதிக்கு துணை போகின்றவர்களை தான் நான் அப்படி சொல்லியிருந்தேன் என்று விளக்கமும் அளித்திருந்தார்.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கிறிஸ்தவ மக்கள் மீது பிற மதத்தினருக்கு வெறுப்பை  உண்டாக்கி கலவரத்தை உண்டாக்கும் எண்ணத்தில் செயல்படுகிறார் எனவும், அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

click me!