தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி நீக்கம்.. இதுதான் காரணமா?

By vinoth kumar  |  First Published Aug 4, 2023, 8:02 AM IST

தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல்களுக்கு பஞ்சமே இருக்காது. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அத்தனை முன்னாள் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் அனைவருமே ஒவ்வொரு கோஷ்டியாக செயல்பட்டு வருகின்றனர்.


தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து சையத் இப்ராஹூம் நீக்கப்படுவதாக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம் பாஷா அறிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல்களுக்கு பஞ்சமே இருக்காது. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அத்தனை முன்னாள் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் அனைவருமே ஒவ்வொரு கோஷ்டியாக செயல்பட்டு வருகின்றனர்.  இந்த கோஷ்டி பூசலால் தமிழகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை எங்கு நடைபெற்றாலும் அமளி துமளி, அடிதடி, மண்டை உடைப்பு, வேட்டி கிழிப்பு உள்ளிட்டவைகள் இயல்பான ஒன்றாகிவிட்டது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- இனிப்பு என்று கூறி தமிழக மக்களின் நாவில் விஷம் தடவும் வேலையில் திமுக அரசு.. கொந்தளிக்கும் இபிஎஸ்..!

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம் பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கின்ற வகையில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் சையத் இப்ராஹிம், அவர் வகிக்கும் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்படுகிறார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் அன்பரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;-  ஜெயக்குமார் எதற்கு சந்துல சிந்து பாடணும்? தலையில் தொப்பி வைத்தால் இபிஎஸ் எம்ஜிஆர் ஆகிவிடுவாரா? டிடிவி.தினகரன்

click me!