நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? டிடிவி. தினகரன் சொன்ன முக்கிய தகவல்..!

By vinoth kumar  |  First Published Jan 17, 2024, 3:06 PM IST

ஓ.பன்னீர்செல்வமும், நானும் வருங்கால அரசியலில் இணைந்து செயல்பட வேண்டும் என ஒரு முடிவை எடுத்துள்ளோம். கூட்டணி பற்றி உரிய நேரத்தில் முடிவை அறிவிப்போம். 


திருவள்ளுவருக்கு காவி ஆடை விவகாரத்தில் ஆளுநர் அவரது பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக உள்ளது என டிடிவி. தினகரன் கூறியுள்ளார். 

கடலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் ;-  ஓ.பன்னீர்செல்வமும், நானும் வருங்கால அரசியலில் இணைந்து செயல்பட வேண்டும் என ஒரு முடிவை எடுத்துள்ளோம். கூட்டணி பற்றி உரிய நேரத்தில் முடிவை அறிவிப்போம். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி தற்போது யோசிக்கவில்லை. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- உளவுத்துறை அதிகாரியோடு ஆ.ராசா ரகசிய பேச்சு... திமுக பைலில் அடுத்த ஆடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்த அண்ணாமலை

திருவள்ளுவர் விவகாரத்தில் ஆளுநரின் செயல் அந்த பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக உள்ளது.  இது போன்று நடவடிக்கைகள் ஆளுநர் செய்வது தவறு.  அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பது தமிழ் மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. 

இதையும் படிங்க;-  இப்படி ஒரு ஆற்றல்மிகு உடன்பிறப்பை அதிமுக கைவிட்டதே.. இவரை பாஜக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.. பூங்குன்றன்..!

தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக எந்த கட்சி செயல்பாட்டாலும் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம்  என உறுதியாக தெரிவித்திருந்தேன்.  விவசாயிகளை,  தமிழ்நாட்டு மக்களை பாதிக்கும் திட்டங்களையும்,  ஸ்டெர்லைட் , மீத்தேன் ஹைட்ரோ கார்பன் என போன்றவற்றையும் தமிழ்நாட்டில் மத்திய அரசு திணிக்கிறது. தற்போது தமிழ்நாட்டு மக்கள் விரும்பாத திட்டங்களை இங்கே திணிப்பதில்லை என நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது.  அதனால் நாங்கள் கடுமையாக விமர்சிப்பதை குறைத்துள்ளோம்.  வெள்ள நிவாரணத்துக்கு உரிய நிதியை மத்திய அரசு தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

click me!