10.5% உள் ஒதுக்கீட்டிற்கான ஆணைய காலக்கெடு நீட்டிப்பு சமூக அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10. 5% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது.
சமூகத்தில் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர்களுக்கு சமூக நீதி வழங்குவதில் தமிழக அரசால் ஏற்படுத்தப்படும் காலதாமதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாதது. தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 42 ஆண்டுகளாக நடத்தப்பட்ட போராட்டங்களின் பயனாக கடந்த ஆட்சியில் வன்னியர்களுக்கு 10. 50% உள் இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. அதுதொடர்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து கடந்த 31. 03. 2022ம் நாள் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை.
உரிய தரவுகளைத் திரட்டி உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று தீர்ப்பளித்தது. ஆனால், அதன் பின்னர் ஓராண்டுக்கு மேலாகியும் வன்னியர் உள் இடஒதுக்கீடு வழங்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. தமிழ்நாடு அரசு நினைத்திருந்தால் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நாளில் இருந்து 3 மாதங்களில் உரிய தரவுகளைத் திரட்டி, சட்டம் இயற்றி கடந்த கல்வி ஆண்டிலேயே உள் இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம். ஆனால், 9 மாதங்கள் தாமதமாக கடந்த நவம்பர் 17ம் நாள் தான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் திருத்தி அமைக்கப்பட்டது.
இதையும் படிங்க..சத்தமே இல்லாமல் அப்டேட்டை கொடுத்த பொன்னியின் செல்வன் 2 படக்குழு.. அடேங்கப்பா இப்படியொரு அப்டேட்டா
அதன்பின் இரு மாதங்கள் கடந்து 2023ம் ஆண்டு ஜனவரி 12ம் நாளில் தான், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10. 50% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்கான கூடுதல் ஆய்வு வரம்பை (Additional Terms of Reference )பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. அது வன்னியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்த 3 மாதங்களுக்குள், அதாவது ஏப்ரல் 11ம் நாளுக்குள் இட ஒதுக்கீட்டிற்கான பரிந்துரை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம்.
தமிழக அரசாணையின்படி வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்த பரிந்துரையை ஏப்ரல் 11ம் நாளான நேற்றைக்குள் அரசிடம் ஆணையம் தாக்கல் செய்திருக்க வேண்டும். இது தொடர்பான நல்ல அறிவிப்பு தமிழக அரசிடமிருந்தும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்தும் வரும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் தான், ஆணையத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. இது பெரும் சமூக அநீதி. இந்த அறிவிப்பை தங்கள் தலையில் விழுந்த பேரிடியாக வன்னிய சமுதாய மக்கள் கருதுகின்றனர்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க..உடனே ராஜினமா.! 12 மாத சம்பளத்தை வாங்குங்க - அமேசான், கூகுள் போட்ட அதிரடி உத்தரவு
இதையும் படிங்க..லெஜன்ட் சரவணன் உடன் நடிக்க சென்ற மணிமேகலை... குக் வித் கோமாளியை விட்டு விலகியது இதுக்குத்தானா?