"நெருப்புடா.. தமிழகத்தை நெருங்குடா பார்ப்போம்.." மதுரைக்கே ஃடப் கொடுத்த கோவை திமுக.. வைரல் போஸ்டர் !!

By Raghupati R  |  First Published Mar 1, 2022, 12:06 PM IST

"நெருப்புடா.. தமிழகத்தை நெருங்குடா பார்ப்போம்.."  என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கோவையில் பிரம்மாண்ட போஸ்டரை ஒட்டியிருக்கின்றனர் கோவை மாவட்ட திமுகவினர்.


முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தனது முதல்வராக அவர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. முதல்வரின் பிறந்தநாளை கோலாகலமாக தமிழ்நாடு முழுக்க உள்ள திமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் கோவையில் லங்கா கார்னர் உட்பட நகரின் பெரும்பாலான இடங்களில் பிரம்மாண்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலினின் 70 புகைப்படங்கள் அடங்கிய பிரம்மாண்ட போஸ்டர்களை ஒட்டியிருக்கின்றனர் கோவை மாவட்ட திமுகவினர். 

இதில் மு.க ஸ்டாலின் குழந்தை பருவம் முதல் தற்போது முதல்வர் பதவி வரையிலான அவரது தனிபுகைபடங்கள், குடும்ப புகைப்படங்கள், அரசியல் வாழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

அதுமட்டுமில்லாமல், இதில் ‘நெருப்புடா. தமிழகத்தை நெருங்குடா பார்ப்போம்’ என்று வாசகங்கள் அதில் இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் கோவையில் 10 தொகுதிகளிலும் திமுக தோல்வி அடைந்தது. எனினும், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை உள்ளிட்ட கொங்கு பகுதியில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றது.

கோவை இனி தங்கள் கோட்டை என்றும் திமுகவினர் கூறி வருகின்றனர். இதனை தெரிவிக்கும் விதமாகவே இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எப்போதும் போஸ்டர்களை சூப்பர் வாசகங்களுடன் ஒட்டுவதில் மதுரைக்காரர்கள் எப்போதும் கெத்து காட்டுவது உண்டு. இப்போது கோவையும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது.

click me!