CV சண்முகம் எங்கள கொஞ்சமாவா அவமானப்படுத்தினாரு.. அதான் கேவலமான தோல்வி.. பாஜக ராம சீனிவாசன்.

By Ezhilarasan BabuFirst Published Mar 1, 2022, 11:47 AM IST
Highlights

தேமுதிகவை உடன் வைத்துக்கொள்ள முடியவில்லை, பாஜகவையும் உடன் வைத்துக் கொள்ள முடியவில்லை அப்படி என்றால் யாரை வைத்து அதிமுக அரசியல் செய்யப்போகிறது. அதனால்தான் இவ்வளவு படுமோசமான கேவலமான ஒரு தோல்வியை அதிமுக சந்தித்திருக்கிறது. ஜெயலலிதாவும் வலுவான தலைவர் தான் ஆனால் 2011-ல், 2006, 2001ல் எல்லாம் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார். 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம் போன்றவர்கள் பாரதிய ஜனதா கட்சியை கூட்டணியில் இருந்தபோது அதை சிறுமைப்படுத்தி, அசிங்கப்படுத்தி பேசினார்கள். அதுதான் இந்த தோல்விக்கு காரணம் என தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் விமர்சித்துள்ளார். இவரைப்போலவே மற்றொரு முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி ஓபிஎஸ் இபிஎஸ் இருக்கிற மேடையிலேயே பாஜகவை மிக இழிவாகப் பேசினார் என்றும் ராம சீனிவாசன் விமர்சித்துள்ளார். எனவே இனிவரும் காலத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கும் பட்சத்தில் அந்த கூட்டணி கொள்கை கூட்டணியாக இருக்க வேண்டும் அதை அதிமுக உறுதிபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலிலும் சரி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் சரி, அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபை தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தது. ஆனால் அதிலும் அதிமுக தோல்வியை சந்தித்ததால் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வி  அடைந்தோம் என அதிமுகவினர் வெளிப்படையாகவே கூறி வந்தனர். குறிப்பாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கே.பி முனுசாமி போன்றோர் பாஜகவை மிக கடுமையாக விமர்சித்து வந்தனர். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் சிறுபான்மையினரின் ஓட்டு அதிமுகவுக்கு கிடைக்கவில்லை என்றும் பாஜகவை தாக்கி வந்தனர். ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட்டும் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது, இதுஏன் என்றும்? இத்தனை சறுக்கல் ஏன் வந்தது என்றும் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் அதிமுகவின் தோல்விக்காண காரணம் குறித்தும் எதிர்வரும் தேர்தலில் அக்கட்சி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம சினிவாசன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- அதிமுக இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்திருக்கிறது. இனி கூட்டணி இல்லாமல் களம் காண முடியாது என்ற எதார்த்தத்தை அதிமுகவுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  கற்பித்திருக்கிறது உண்மையிலேயே அதிமுக பாஜகவின் ஒரு மதிப்புமிக்க கூட்டணிதான், அதில் எந்த சந்தேகமும் இல்லை, திமுக போன்று ஒரு வலிமையான பொது எதிரியை சந்திக்க வேண்டிய தமிழ்நாட்டில் அதிமுக போன்று ஒரு கட்சி தொடர்ந்து பாஜகவுடன் நிற்க்க வேண்டும். பாஜக அதிமுகவுடன் இருக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, அதேநேரத்தில் அதிமுக பாஜக கூட்டணி என்பது வெறும் தேர்தல் கூட்டணியாக மட்டுமில்லாமல், கொள்கை கூட்டணியாக இருக்க வேண்டும். எனவே அதிமுக ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். 

பாஜகவுடன் பயணம் செய்யப் போகிறோமா இல்லையா? அப்படி பயணம் செய்தால் இந்த விஷயத்திற்காக நாம் எவற்றையெல்லாம் ஆதரிக்க வேண்டும்? காமன் மினிமம் ப்ரோக்ராம்ஸ் வைத்து செயல்பட வேண்டும். திமுக அதன் கூட்டணியை கொள்கைக் கூட்டணியாக வைத்திருக்கிறது. அதுபோல நாமும் முயற்சிக்க வேண்டும்.  இதை அதிமுகவினரும் யோசிக்க வேண்டும். கூட்டணியில் இருந்து கொண்டே சில அதிமுக அமைச்சர்கள் பாஜகவை எந்த அளவிற்கு கொச்சைப்படுத்தி அவமானப்படுத்தி பேசினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பாஜக கூட்டணியால் தான் 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோற்றது என சி.வி சண்முகம் வெளிப்படையாகவே பேசினார். கூட்டணியில் இருந்து கொண்டே கேபி முனுசாமி ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோர் மேடையில் இருக்கும்போதே அதிமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். ஆனால் அதை கூட அதிமுக  தலைமைகள் கண்டிக்கவில்லை. இந்நிலையில்தான் படுதோல்வியை அதிமுக சந்தித்திருக்கிறது. 

இப்போது அதிமுக ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். பாஜகவுடன் சேர்ந்து நின்றால் வெற்றியா? விலகி நின்றால் வெற்றி? என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் வெறும் தேர்தல் கூட்டணியாகமட்டும் இல்லாமல் கொள்கைக் கூட்டணியாக இருக்க வேண்டும். அதிமுகவால் பாமகவை கூட்டணியில் வைத்துக் கொள்ள முடியவில்லை, தேமுதிகவை உடன் வைத்துக்கொள்ள முடியவில்லை, பாஜகவையும் உடன் வைத்துக் கொள்ள முடியவில்லை அப்படி என்றால் யாரை வைத்து அதிமுக அரசியல் செய்யப்போகிறது. அதனால்தான் இவ்வளவு படுமோசமான கேவலமான ஒரு தோல்வியை அதிமுக சந்தித்திருக்கிறது.  ஜெயலலிதாவும் வலுவான தலைவர் தான் ஆனால் 2011-ல், 2006, 2001ல் எல்லாம் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார். அந்தளவுக்கு வலுவான கூட்டணியை அமைத்ததினால்தான் திமுகவை வீழ்த்த முடிந்தது. அந்த அணுகுமுறை இப்போது ஏன் இல்லை என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. இவ்வாறு ராம சீனாவாசன் தெரிவித்துள்ளார்.

 

click me!