உதயசூரியன் சின்னம், கறுப்பு சிவப்பு கொடி, டாப்பில் ஸ்டாலின்-துர்கா உருவம்.. வைரலாகும் பிறந்த நாள் கேக்..!

Published : Mar 01, 2022, 11:24 AM ISTUpdated : Mar 01, 2022, 01:58 PM IST
உதயசூரியன் சின்னம், கறுப்பு சிவப்பு கொடி, டாப்பில் ஸ்டாலின்-துர்கா உருவம்.. வைரலாகும் பிறந்த நாள் கேக்..!

சுருக்கம்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார். அந்த கேக்கில் உதய சூரியன் சின்னத்தில் கறுப்பு சிவப்பு கொடியுடன் டாப்பில் ஸ்டாலின்- துர்கா அமந்திருப்போது போல வவடிவமைக்கப்பட்டிருந்தது. 

உதய சூரியன் சின்னத்தில் கறுப்பு சிவப்பு கொடியுடன் டாப்பில் ஸ்டாலின்- துர்கா அமந்திருப்போது போல வடிவமைக்கப்பட்ட கேக்கை வெட்டி பிறந்தநாளை மு.க.ஸ்டாலின் கொண்டாடினார். அப்போது, அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரிசன் உடனிருந்தனர். 

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஸ்டாலின் தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடுவதைத் தவிர்த்து வந்தார். தொண்டர்களை சந்தித்தும் அவர் வாழ்த்து பெறாமல் இருந்தார். இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்ற போது பதவியேற்பு விழாவை எளிமையான முறையில் ஸ்டாலின் நடத்தினர். இந்நிலையில், ஆண்டு முதலமைச்சராக அரியனையில் அமர்ந்து தனது 69வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.  முதல்வரான பின்னர் வரும் முதல் பிறந்தநாள் என்பதால், திமுகவினம் விமர்சியாக கொண்டாட திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், தனது பிறந்தநாளையொட்டி நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், என் பிறந்தநாளையொட்டி,  தொண்டர்கள்  நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டிவிடக் கூடாது என்றும்,  மக்களுக்கு பயனுள்ள வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.

"

இதனையடுத்து, பிரதமர் மோடி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் அரசியல் தலைவர்கள் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார். அந்த கேக்கில் உதய சூரியன் சின்னத்தில் கறுப்பு சிவப்பு கொடியுடன் டாப்பில் ஸ்டாலின்- துர்கா அமந்திருப்போது போல வவடிவமைக்கப்பட்டிருந்தது. தனது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் ஆகியோருடன் பிறந்தநாள் கேக் வெட்டினார். இது தொடர்பான புகைப்படம் சமூவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!