இது என்ன அதிமுகவுக்கு வந்த சோதனை.. கோகுல இந்திரா மீதும் வழக்கு.. வரிசையாக சிக்கும் அதிமுக மாஜி அமைச்சர்கள்..

By Ezhilarasan Babu  |  First Published Mar 1, 2022, 10:45 AM IST

அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக காவல் துறையை கண்டித்து அதிமுகவினர் முழக்கம் எழுப்பினர். இந்நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, முன்னாள் எம்.எல்.ஏ விருகை ரவி, அ.தி.மு.க அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, ராஜேஷ் உள்பட 2,500 பேர் மீது வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தடையை மீறி போராட்டம் நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்பட அ.தி.மு.க-வைச் சேர்ந்த 2500 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டம் நடத்திய நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் திமுக  மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகள் தோல்வியையல்ல படுதோல்வியைச் சந்தித்துள்ளன.

இது ஒருபுறமிருக்க வாக்குப்பதிவு அன்று கள்ள ஓட்டு போட் வந்ததாக திமுகவைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை அதிமுகவினர் சுற்றிவளைத்து பிடித்துடன் பின்னர் அது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தகவல் கொடுத்தனர், சம்பவ இடத்துக்கு வந்த அவர் அந்த நபரின் கைகளைக் கட்டி போலீசில் ஒப்படைத்தார். அப்போது அங்கிருந்த அதிமுக தொண்டர்களால் நரேஷ் தாக்கப்பட்டார். கள்ள ஓட்டு போட வந்தார் என்பதற்கான ஆதாரம் இல்லாத நிலையில் ஒருவரை பிடித்து அவரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கியது சட்டத்திற்குப் புறம்பான செயல், தான் ஒரு முன்னாள் அமைச்சர் என்பதையும் மறந்து ஜெயக்குமார் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அந்த நபரை அவமானப்படுத்தும் வகையில் நடந்துகொண்டார். அந்த நபரை அரை நிர்வாணப்படுத்தி சாலையில் கொலைக் குற்றவாளியைப் போல நடத்தினார், அந்த நபருக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என பின்னர் ஜெயக்குமார் மீது  குற்றச் சாட்டு எழுந்தது பொது மக்கள் பலரும் ஜெயக்குமாரின் நடவடிக்கையை கண்டித்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட நரேஷ்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது வீட்டில் வைத்து அவரை கைது செய்தனர்.

Latest Videos

ஜெயக்குமார் கைது விவகாரம் அதிமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமாரின் கைதை கண்டித்து வருகின்றனர். இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ்.இபிஎஸ் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களை கைது செய்த திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து வரும் 28 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். அதனடிப்படையில் நேற்று தமிழகம் முழுவதும் தலை நகரங்களில் ஆராப்பாட்டம் நடைபெற்றது. இந்த வகையில் சென்னையிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் நடந்தது. ஆனால் இந்த போராட்டதிற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை, ஆனாலும் தடையை மீறி போராட்டம் நடந்தது.

அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக காவல் துறையை கண்டித்து அதிமுகவினர் முழக்கம் எழுப்பினர். இந்நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, முன்னாள் எம்.எல்.ஏ விருகை ரவி, அ.தி.மு.க அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, ராஜேஷ் உள்பட 2,500 பேர் மீது வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மதிக்காமல் இருத்தல், உயிருக்கு ஆபத்தான தொற்று நோய் பரப்பக்கூடிய கவனக் குறைவான செயலில் ஈடுபடுதல், பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தல், மற்றும் அனுமதி இல்லாமல் பேனர் வைத்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 

click me!