மீண்டும் உச்சத்தில் சிலிண்டர் விலை...? அதிர்ச்சியில் பொதுமக்கள்...!

By manimegalai aFirst Published Mar 1, 2022, 10:33 AM IST
Highlights


 சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது

பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் சமையல் எரிவாயு  முக்கிய பங்கு வகித்து வருகிறது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் விறகு மற்றும்  மண்ணெண்ணெய் அடுப்பு போன்றவை பயன்படுத்தி வந்திருந்த நிலையில் காலப்போக்கில் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் நிலையானது உருவானது. ஆரம்பத்தில் சிலிண்டரின் விலை 350 ரூபாயில்  இருந்து வந்தது.  படிப்படியாக சிலிண்டரின் விலையும் உச்சத்தை அடைந்துள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் சிலிண்டர் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு மீண்டும் பழைய நிலைக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது..

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை அடிப்படையில் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்துக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இந்த நிலையில் இந்த மாதத்துக்கான சமையல் எரிவாயு விலை அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த மாதத்தை காட்டிலும் 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டர் விலையானது 105 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது., இனி சென்னையில் ஒரு வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டரின் விலை 2,145 ரூபாயாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே  ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் மற்றும் டீ  கடைகளில் விற்கப்படும் வணிக பயன்பாட்டிற்கான  சிலிண்டர் விலையானது  2145 ரூபாய் என உயர்ந்துள்ளது..47.5 கிலோ எடையுள்ள வணிக பயண்பாட்டு சிலிண்டர் 5361 ரூபாய் எனவும், 5 கிலோ புதிய இணைப்பிற்கான வணிக பயண்பாட்டு சிலிண்டர் விலை 1539 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அதேநேரத்தில் வீட்டில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில்  எவ்வித மாற்றமுமின்றி 915 ரூபாய்க்கு விற்பனையாகும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 337 ரூபாயாகவும், 10கிலோ சமையல் எரியாவு விலை 644 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது.  வணிக சிலிண்டரின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டதால்  உணவகங்கள் மற்றும் டீ கடைகளில் உணவு விலை பலமடங்கு உயர்வதற்கு  வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் 5 மாநில தேர்தல் காரணமாக விலை உயர்த்தாமல் இருந்த வந்த பெட்ரோல் டீசல் விலையும் மீண்டும் உயரும் என கூறப்படுகிறது. தற்போதே 1 லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ள நிலையில் மீண்டும் விலையேற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!