தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை அவருடைய சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க அழகிரி இன்று சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.அழகிரி, திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளராக பொறுப்பு வகித்தார். மதுரை தொகுதி எம்பியாக வெற்றி பெற்று மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார் அழகிரி. அவரது ஆதரவாளர்கள் பலர் எம்எல்ஏக்களாக வெற்றி பெற்றனர்.
தென் மாவட்டங்களில் பவர்புல்லாக இருந்த அழகிரி திருமங்கலம் இடைத்தேர்தலின் போது புது பார்முலாவை அறிமுகம் செய்து வெற்றி பெற்றார். குடும்ப சண்டை கடந்த 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது திமுகவுக்கு எதிராகவும் ஸ்டாலினுக்கு எதிராகவும் கருத்துக்கள் தெரிவித்ததாக கூறி, அவ கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
undefined
கட்சியில் இருந்து நீக்கிய நாள் முதலே ஸ்டாலினுக்கு எதிராக பல கருத்துக்களை கூறிய அழகிரி, 2016 சட்டசபைத் தேர்தலின் போது திமுகவிற்கு எதிராகவே செயல்பட்டார். குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும் இரண்டு தரப்பினரும் சமாதானம் அடையவில்லை. போஸ்டர்கள் மூலம் கவனம் முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் கட்சித் தலைமை பொறுப்பேற்றதற்கும் மு.க.அழகிரி எதிர்ப்பு தெரிவித்தார்.
மு.க.அழகிரி ஆதரவாளர்கள் பலர் அவரிடம் இருந்து ஸ்டாலின் பக்கம் சென்றனர். சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற நிகழ்ச்சியில் மு.க.அழகிரியின் குடும்பத்தினர் பங்கேற்றனர். இதன்பின்னரும் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போதும் மு.க. அழகிரியும் முதல்வர் மு.க. ஸ்டாலினும் நேரடியாக சந்திக்காமல் இருந்து வந்தனர்.
இன்று பிற்பகல் மதுரையில் இருந்து மு.க. அழகிரி சென்னைக்கு விமானம் மூலம் வருகிறார் என்றும், சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மு.க.அழகிரி பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.