பருத்தி , நூல் விலை உயர்வு.. வேலை நிறுத்த போராட்டம்.. பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..

Published : May 16, 2022, 11:00 AM IST
பருத்தி , நூல் விலை உயர்வு.. வேலை நிறுத்த போராட்டம்.. பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..

சுருக்கம்

பருத்தி, நூல்‌ விலை உயர்வின்‌ காரணமாக தமிழகத்தில்‌ ஜவுளித்‌ தொழில்‌ எதிர்கொள்ளும்‌ கடுமையான பிரச்சினைகளைக்‌ கருத்தில்‌ கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர்‌ நரேந்திர மோடி தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ கடிதம்‌ எழுதியுள்ளார்.  

நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர், ஈரோடு , கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விசைத்தறி உரிமையாளர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். பஞ்சு விலை ஒரே ஆண்டில் 2 மடங்கு உயர்ந்து ஒரு கேண்டி ரூ.1 லட்சமாக அதிகரித்துள்ளது. வரலாறு காணாத வகையில் பஞ்சு விலையும் உயர்ந்து இருப்பதன் காரணமாக இனி வரும் மாதங்களில் நூல் விலை மீண்டும் உயரும் அபாயம் இருப்பதாக பின்னலாடை நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன.

மேலும் படிக்க: காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை எம்.பி. யார்.? ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி மட்டுமல்ல இன்னொருவரும் போட்டியில்!

மேலும் மத்திய அரசு பருத்தி பதுக்கலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை ரத்துசெய்து உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும் , நூல் இறக்குமதிக்கான வருகை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பின்னலாடை தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக நூல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் இம்மாதம் கிலோ ரூ.40 உயர்ந்தது. திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் ஸ்டிரைக்கால் நாளொன்றுக்கு ரூ.360 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் விலை உயர்வால் ஜவுளித்துறைகள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளை கருத்தில் கொள்ள வேண்டும் . மேலும் ஆலைகளில் பருத்தி மற்றும் நூல் இருப்பு உள்ளிட்டவை குறித்த விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

மேலும் படிக்க: தமிழகம் வர இன்னும் 10 நாள் இருக்கும் போதே.. டுவிட்டரில் #GoBackModi டிரெண்டிங்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம்.. ராமதாஸை சுற்றி தீய சக்திகள்.. ஒரே போடாக போட்ட அன்புமணி!
ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?