முதல்வர் கைரேகை எழும் சர்ச்சை - உண்மை என்ன?

Asianet News Tamil  
Published : Oct 30, 2016, 04:14 AM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
முதல்வர் கைரேகை எழும் சர்ச்சை - உண்மை என்ன?

சுருக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதா வேட்பாளர்களுக்கு அளித்த கடிதத்தில் கைரேகை வைத்ததாக தகவல் வெளியானதால் முதல்வர் கையெழுத்து போடமுடியாத நிலையில் இருக்கிறாரா என தொண்டர்கள் தவித்து வருகின்றனர். இது குறித்து அலசல்.

முதல்மைச்சர் ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். கட்சி சார்பில் தேர்தலில் நிற்பவர்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் அவர்தான் கடிதம் தர வேண்டும். மேலும் கட்சி சின்னம் ஒதுக்கவும் அவர்தான் கடிதம் அளிக்க வேண்டும். 

இத்தகைய முக்கியமான கால கட்டத்தில் நான்கு தொகுதி இடைதேர்தல் அறிவிக்கப்படுகிறது. விஸ்வரூபம் எடுத்துள்ள திமுக இந்த இடைதேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறது. 

கட்சியின் பொதுச்செயலாளர் மருத்துவமனையில் இருக்க்கிறார். அவரது உடல் நிலைப்பற்றி பல்வேறு ஊகங்கள் கிளம்பியுள்ள நேரத்தில் முதல்வர் கையெழுத்து போடாமல் கைரேகை வைத்து ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளதாக அந்த கடித ஆதாரத்துடன் வந்துள்ள தகவல் மீண்டும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. 

இது குறித்து அதிமுகவின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவாது. முதலமைச்சர் பூரண நலம் பெற்று தொடர் சிகிச்சைகள் எடுத்துவருகிறார்.அவர் உடல் நிலையில் சீரான முன்னேற்றம் இருந்து வருகிறது. ஆனால் ஒரு விஷயத்தை கவையுங்கள்.

முதலமைச்சர் கைரேகை வைத்து கடிதம் கொடுத்துள்ளார் என்ற எண்ணம் வேறுவித எதிர் மறை சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க வாய்ப்புள்ளது எனபதை ஏற்றுகொள்கிறேன், ஆனால் நான் சில கேள்விகள் கேட்கிறேன் அதற்கு பதிலளியுங்கள் பிறகு உங்களுக்கே தெரியும் என்றவர் அதற்கு முன்னாள் இந்த கடிதம் முதல்வர் கைரேகை வைத்து கொடுத்தது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு முதல்வர் பூரண நலத்துடன் இருக்கிறார் என்பதும் உண்மை என்றார்.

பின்னர் அவர் கூறியதாவது. முதலமைச்சர் உடல்நிலை எந்த எல்லைக்கு சென்றுவிட்டு மீண்டிருக்கிறார் , உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டவர் எத்தகைய சிகிச்சை பெற்றிருப்பார் அவர் உடல்நிலை தேறினாலும் பழைய நிலையை உடனே அடைய முடியுமா? இந்த நிலையில் தான் இடைதேர்தல் அறிவிக்கப்படுகிறது.

இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் இங்கு கவனிக்க வேண்டும் ஏற்கனவே சசிகலா புஷ்பா போன்றவர்கள் முதல்வர் கையெழுத்தை மற்றவர்கள் போடுகிறார்கள் என்று கிளப்பிவிட அதை மேற்கோள் காட்டி திமுக தலைவரே தகுதி மறந்து அறிக்கைவிடுவதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். 

இந்த சூழ்நிலையில் வரும் இடைதேர்தல் அதற்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஒப்புதல் கடிதம் அளிக்கவேண்டும் அந்த கடிதத்தில் முதல்வர் கையெழுத்திடுகிறார் என்றே வைத்துகொள்வோம். சாதாரண உடல் நிலை காய்ச்சல் ஒரு வார இருந்தாலே உடல் சோர்வில் எழுந்திரிக்க முடியாத நிலையில் நோயுற்றவர்கள் இருக்கும்போது கிட்டத்தட்ட 40 நாட்கள் மறுபிறப்பு எடுத்துள்ளவர் பிசியோதெரபி சிகிச்சை தேவையில் உள்ள ஒருவர் கையெழுத்திட்டால் அது இயல்பான கையெழுத்தாக இருக்குமா? 

முதல்வர் கையெழுத்து அழகாக பூக்கட்டியது போல் கோர்வையாக வரும் அந்த கையெழுத்தில் இப்போதிருக்கும் நிலையில் லேசாக கை நடுங்கி சில மாற்றங்கள் இருந்தால் அதை வைத்து ஆராய்ச்சி செய்து இது முதல்வர் கையெழுத்தா , சசிகலா கும்பல் போட்ட கையெழுத்தா ஒரிஜினல் கையெழுத்து இது , இப்போது போட்டுள்ளது இது வித்யாசம் பாருங்கள் இது முதல்வர் கையெழுத்தே அல்ல போலி என்று ஆராய்ச்சி கட்டுரையே எழுத எத்தனை பேர் தயாராக இருக்கின்றனர் தெரியுமா? 

இதை சசிகலா புஷ்பா போன்றவர்கள் வழி மொழிவார்கள் , அதற்கு உதாரணம் காட்டி திமுக தலைவர் கடிதம் எழுதுவார். தேர்தல் ஆணையத்தில் கடிதம் போலி அதனால் கட்சி சின்னம் ஒதுக்காதீர்கள் என ஒரு கூட்டம் கிளம்பும். பின்னர் இதற்கு பின்னால் ஓடுவதற்கும் கட்சி சின்னம் வாங்குவதற்கு தேர்தல் ஆணையம் பின்னால் ஓடுவதற்கும் , கோர்ட்டுக்கு அலைவதற்கும் நேரம் சரியாக இருக்கும். 

இது போன்ற ஒரு பிரச்சனை இருக்கிறது , வரும் எனபது அவர்களுக்கு தெரியாதா? அனைத்து பிரச்சனைகளையும் மூட , அனைவர் வாயை அடைக்கத்தான் இந்த ஏற்பாடு , அதில் முதல்வர் கைரேகைதான் என்பதிலும் பிரச்சனை கிளப்புவார்கள் என்பதற்காகத்தான் அரசு மருத்துவர் கையெழுத்திட்டு சீலுடன் கடிதம் தரப்பட்டுள்ளது. 

இதற்கு அர்த்தம் கையெழுத்திட முடியாத நிலையில் இருக்கிறார் என்பதல்ல அதில் கூட சிலர் எண்ணம் அதிமுக வெற்றிக்கு இடையூறாக அமைய வாய்ப்பு அளிக்க கூடாது என்பதற்குத்தான் என்று கூறியவர், இப்ப சொல்லுங்க இதில் என்ன பிரச்சனை உள்ளது என்று கேட்டார். ஒன்றுமில்லை என்று நடையை கட்டினோம். 
 
 

PREV
click me!

Recommended Stories

CM Vijay Convoy: காரின் கண்ணாடியை இறக்கிய முதல்வர் விஜய்! பாய்ந்து வந்த இளைஞர்! நடந்தது என்ன?
Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!