
நாராயணசாமிக்கு புது சிக்கல் எழுந்துள்ளது. நெல்லித்தோப்பில் நாராயணாசாமி போட்டியிடபோட்டியிட தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு.
கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலுடன் பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தலும் நடந்தது. இந்த தேர்தலில் பரம சிவத்தை முதல்வர் வேட்பாளராக தேர்தலை சந்தித்தனர். ஆனால் காங்கிரஸ் வெற்றி பெற்று கூட்டணி கட்சி துணையுடன் ஆட்சி அமைக்கும் என்ற நிலை வந்தவுடன் நாராயணசாமி தனது செல்வாக்கால் முதல்வர் ஆனார்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாததால் அவர் 6 மாதத்துக்குள் எம்.எல்.ஏ ஆகவேண்டிய நிலையில் முதல்வராக பதவி ஏற்றார். இந்நிலையில் அவர் போட்டியிட வசதியாக நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் ஆதாயத்துடன் ராஜினாமா செய்வதாகவும் பெரும் தொகை கைமாறியதாகவும் அப்போது விமர்சனம் எழுந்தது. ஜான்குமார் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டும் நடந்து பணம் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில் நெல்லித்தோப்பு இடைதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு முதல்மைச்சர் நாராயண சாமி அங்கு போட்டியிட வேட்பு மனுதாக்கலும் செய்தார் . இந்நிலையில் நெல்லித்தோப்பு தொகுதியில் புதுச்சேரி முதல்வர் நாராயணாசாமி போட்டியிட தடைவிதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர் சுப்பிரமணியன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டதால் எம்எல்ஏ ஜான் பதவி விலகியதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பதவி விலக பல கோடி பணம் கைமாறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜான்குமார் இதில் ஆதாயம் அடைந்திருக்கிறார், மேலும் இது ஜான்குமாருக்கு வாக்களித்த மக்களின் நம்பகத்தனமைக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு மூலம் நாராயண சாமிக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.