எளியோரின் பசியாற்றும் ஈரோடு தம்பதியினர்… இதயத்தை நனைத்துவிட்டதாக மு.க.ஸ்டாலின் டிவீட்!!

Published : Aug 31, 2022, 06:50 PM IST
எளியோரின் பசியாற்றும் ஈரோடு தம்பதியினர்… இதயத்தை நனைத்துவிட்டதாக மு.க.ஸ்டாலின் டிவீட்!!

சுருக்கம்

எளியோரின் பசியாற்றும் ஈரோடு வெங்கட்ராமன் – ராஜலட்சுமி தம்பதியினரின் செயல் தனது இதயத்தை நனைத்துவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

எளியோரின் பசியாற்றும் ஈரோடு வெங்கட்ராமன் – ராஜலட்சுமி தம்பதியினரின் செயல் தனது இதயத்தை நனைத்துவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் அரசு மருத்துவமனை அருகே, வெங்கட்ராமன் – ராஜலட்சுமி என்ற தம்பதியினர் உணவகம் நடத்தி வருகின்றனர். அங்கு ஒரு ரூபாய்க்கு 3 வேளையும் உணவளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கனல் கண்ணா, நீ சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் தான் ... பெரியார் ரியல் ஸ்டண்ட் மாஸ்டர்.. மதுக்கூர் ராமலிங்கம்.

இதனால், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக வரும் ஏழை, எளிய நோயாளிகள் தங்களது பசியை ஆற்றி கொள்கிறார்கள். இந்த நிலையில் வெங்கட்ராமன் – ராஜலட்சுமி தம்பதியினரின் இந்த செயல் தனது இதயத்தை நனைத்துவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஓவார் பேச்சு.. 8 வழி சாலையில் மாட்டிய எ.வ வேலு.. விழுந்தடித்து கொடுத்த விளக்கம்.

இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்; உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே என மணிமேகலை காட்டும் வழியில் மானுடம் போற்றி, எளியோரின் பசியாற்றும் ஈரோடு வெங்கட்ராமன் - ராஜலட்சுமி இணையரின் ஈரமனது எனது இதயத்தையும் நனைத்துவிட்டது. ஈதல்! இசைபட வாழ்தல்! இதுவே தமிழறம்! என்று தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

வாரிசு அரசியல் + ஊழல்.. திமுக அரசை விளாசித் தள்ளிய அமித்ஷா.. டிடிவிக்கு வெல்கம்!
விஜயின் கிறிஸ்தவ வாக்குகளில் வேட்டு வைத்த ஸ்டாலின்..! திமுகவின் அதிரடி வியூகம்..!