உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் படிப்பு விவகாரம்... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!

By Narendran SFirst Published Sep 16, 2022, 8:07 PM IST
Highlights

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் மருத்துவப்படிப்பை தொடர வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் மருத்துவப்படிப்பை தொடர வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். உக்ரைனில் மருத்துவம் படிக்க இந்திய மாணவர்கள் சுமார் 20,000 பேர் சென்றிருந்தனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2,000 பேரும் அடங்குவர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து, இந்திய மாணவர்கள் அனைவரும் நாடு திரும்பினர். போர் தொடர்ந்து நீடித்து வருவதால் மருத்துவ மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கு... பள்ளி நிர்வாகிகள் ஜாமீனை ரத்து செய்ய வழக்கறிஞர்கள் சார்பில் முறையீடு!!

இதை அடுத்து உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தங்களது படிப்பை தொடர இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் அனுமதிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் உக்ரைன் மருத்துவ மாணவர்களை இந்திய கல்லூரிகளில் அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. தேசிய மருத்துவ ஆணையத்தின் சட்டத்தில் இதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

இதையும் படிங்க: இந்துக்கள் விபச்சாரி வீட்டு பிள்ளைகளா..? கோயில் கோயிலாக போகும் துர்கா, சபரீசன் யார்..? செல்லூர் ராஜூ கேள்வி

இந்த நிலையில் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் மருத்துவப்படிப்பை தொடர வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுக்குறித்த அவரது கடிதத்தில், உக்ரைனில் நிலவும் போர் காரணமாக மருத்துவ படிப்பை தொடர முடியாமல் இந்தியா திரும்பிய மாணவர்கள் உள்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரிகளில் கல்வியைத் தொடர வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். வெளிநாடுகளில் படிப்பை தொடர விரும்பும் மாணவர்களுக்கு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை அடையாளம் காண கட்டமைப்பு ஏற்படுத்தி வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

click me!