மழை, வெள்ள பாதிப்பு… நிவாரண நிதியை உடனே வழங்குக… உள்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!

By Narendran SFirst Published Jan 17, 2022, 7:36 PM IST
Highlights

வடகிழக்கு பருவமழை பாதிப்பு, வெள்ள நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

வடகிழக்கு பருவமழை பாதிப்பு, வெள்ள நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுக்குறித்த அவரது கடிதத்தில், 2021 வடகிழக்கு பருவமழையின்போது தமிழ்நாட்டில் வரலாறு காணாத மழை பெய்து சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தியதை ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள தனது கடிதத்தில் நினைவூட்டியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை நிறைவேற்ற ஒன்றிய அரசிடமிருந்து ரூ.6230.45 கோடி நிதி உதவி கோரி தனது அரசால் மூன்று முறை கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை ஏற்கனவே பரவியுள்ள சூழலில், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை மாநில அரசு முழுமையாக முடுக்கிவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கான பெரும் நிதித் தேவை மாநில நிதிநிலையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடிய அதே வேளையில், கொரோனா கட்டுப்படுத்துதலுக்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு விதிமுறைகள், ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரத்தை மேலும் கூட்டுவதாக அமைந்திருப்பதையுத் சுட்டிக் காட்டியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கும் மாநில நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வெள்ளச் சேதங்களுக்கான சீரமைப்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிதி விடுவிக்கப்பட்டால் அது மாநில மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்' என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு விரைந்து நிதியுதவி அளிப்பதற்குத் தாங்கள் உதவிட வேண்டும் என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளார். இன்று புதுடெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சந்தித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை வழங்கினார்.

click me!