நீங்க நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழனும் நண்பா.. ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்..!

By vinoth kumar  |  First Published Dec 12, 2022, 9:22 AM IST

தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் இன்று தனது 73-வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்துள்ளார். இதன் காரணமாக அவரது ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 


73-வது பிறந்தநாளை கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் இன்று தனது 73-வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்துள்ளார். இதன் காரணமாக அவரது ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டு வாசலில் நள்ளிரவு 12 மணிக்கு கூடிய ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ரஜினிகாந்த் ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- பிறந்தநாள் காணும் ரஜினிகாந்திற்கு மனதார வாழ்த்து சொன்ன தனுஷ் - வைரலாகும் டுவிட்டர் பதிவு

undefined

பல்வேறு கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளை நடத்தி அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்க அவரது இல்லத்தில் ரசிகர்கள் குவிந்துள்ளனர். இதனிடையே, ரஜினியின் பிறந்த நாளை ஒட்டி நேற்று முன்தினம் அவர் நடித்திருந்த பாபா திரைப்படம் டிஜிட்டல் முறையில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது ரசிகர்களை மகிழ்ச்சியை அடைய வைத்தது. ஒருபக்கம் சினிமா பிரபலங்களும் மறுபக்கம் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

— M.K.Stalin (@mkstalin)

 

இந்நிலையில், ரஜினிகாந்த் நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க;-  ஒருவேளை சோற்றுக்கே கஷ்டப்பட்ட ரஜினிக்கு தாயுமானவனாக இருந்த உடுப்பிகாரர்! சூப்பர்ஸ்டாரின் அறியப்படாத மறுபக்கம்

click me!