14ஆம் தேதி அமைச்சராக பதவி ஏற்கிறாரா உதயநிதி..? எந்த துறை ஒதுக்கீடு செய்யப்படுகிறது..? வெளியான பரபரப்பு தகவல்

By Ajmal Khan  |  First Published Dec 12, 2022, 8:43 AM IST

திமுக இளைஞர் அணி செயலாளராகவும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி வருகிற 14 ஆம் தேதி அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அவருக்கு விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
 


உதயநிதியும் திமுகவும்

தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு ஆட்சியை இழந்த திமுக மீண்டும் ஆட்சிக்கு வர 10 வருடங்கள் ஆனது. இந்த இடைப்பட்ட காலத்தில் திமுக சந்தித்த அனைத்து தேர்தல்களும் தோல்வியிலேயே முடிவடைந்தது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 39 தொகுதியில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஸ்டாலின் முக்கிய பங்கு வகித்தாலும் அதற்கு அடுத்தபடியாக உதயநிதியை திமுகவினர் கூறி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் முழுவதும் தீவிரம் பிரச்சாரம் செய்த உதயநிதி, எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக ஒற்றை செங்களை காண்பித்து பொதுமக்களின் வாக்குகளை அபகரித்தார். இதனையடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் தீவிரமாக பிரச்சாரம் செய்து திமுக வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

Latest Videos

முதல்வரின் முக்கிய துறை.. நீங்க தான் அமைச்சரா ? உதயநிதி ஸ்டாலின் சொன்ன ‘அந்த’ பதில் !

உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு

இதனையடுத்து திமுக ஆட்சி அமைத்த போதே உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால் அப்போது பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. இந்தநிலையில் திமுக கூட்டங்களுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் உதயிநிதியை தொண்டர்கள் சின்னவர் என அன்போடு அழைத்து வருகின்றனர். மேலும் உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க்கப்பட வேண்டும் என அமைச்சர்கள் முதல் திமுக நிர்வாகிகள் வரை வலியுறுத்தி வருகின்றனர். உதயநிதியும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை.. போற போக்கில் உதயநிதியை சீண்டிய செல்லூர் ராஜூ..!

விளையாட்டு துறை வழங்க திட்டம்.?

இந்தநிலையில் தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்படலாம் எனவும் புதிய அமைச்சரவையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதார இயக்கங்கள் உள்ளிட்ட துறைகள் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதை போல தற்போது விளையாட்டு த்துறை அமைச்சராக இருக்கும் மெய்யநாதனுக்கு சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட இருப்பதாக தெரிகிறது. மேலும் ஒரு சில அமைச்சர்களை மாற்றி மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்ப இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்

மாண்டஸ் புயலால் சாதரண காற்று,மழை தான் ! மக்களை காப்பாற்றியது போல் பில்டப் செய்யும் ஸ்டாலின்.? இபிஎஸ் ஆவேசம்

click me!